தே.பா சட்டத்தில் விஜயகாந்தை கைது செய்யக் கோரி போராட்டம்

கடந்த 22.09.2013 அன்று தூத்துக்குடியில் நடந்த தேமுதிக கூட்டத்தில் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோரின் பேச்சுக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கத் தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நாடார் சமுதாயத்தின் அனைத்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தனர்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் விஜயகாந்த், பிரேமலதாவை கைது செய்யவேண்டும் என்று அப்போது அவர்கள் வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அனைத்து பிரிவுகலை சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது அவர்கள் பேசியதாவது:
முறைப்படி மத்திய அரசில் அனுமதி பெற்று தாது மணல் தொழில் புரிபவர்களை மணல் கொள்ளையர்கள் என்று கூறக் கூடாது...
தாது மணலை அரசுக்கு தெரியாமல் கப்பல் மூலம் ஏற்றுமதி செய்ய முடியாது அதனால் இது அரசின் துணையோடு நடக்கும் தொழில்... அரசிற்கு வரிசெலுத்தி, வருமானத்தை கொடுக்கின்ற தொழில்..
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து நாட்டிற்கு அந்நிய செலவாணியை பெற்று, இந்திய பொருளாதாரத்தை ஏற்றம் பெறச் செய்யும் முறையான தொழில்...
இப்படிப்பட்ட பேரும், புகழும் வாய்ந்த, பெருமை மிக்க தொழிலை, கொள்ளைத் தொழில் என்று சித்தரித்து பேசிய விஜயகாந்தையும், அவரது மனைவி பிரேமலதாவையும் கண்டிக்கிறோம்...
இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு எதிராகப் பேசிய விஜயகாந்தையும், பிரேமலதாவையும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்...
இந்நிலையில் வைகுண்ட ராஜனுக்கு ஆதரவாக நாடார் சமுதாயம் குரல் கொடுப்பது போல் பி.ஆர்.பி.க்கு ஆதரவாக தேவர் சமுதாயம் பெயரில் போஸ்டர்கள் தூள் பறக்கத் தொடங்கியுள்ளன.
கனிம வள கொள்ளை சம்பந்தமாக இரு தரப்பு சார்பில் போஸ்டர் போர் தற்போது தொடங்கியுள்ளது.கடலோர மாவட்டம் மட்டுமில்லை தமிழகம் முழுவதும் இந்த பரப்பரப்பு போஸ்டர் ஒட்டப்ப படுமேயானால் இதன் மூலமும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது.அதற்குள் அரசு விழித்துக் கொள்வது நல்லது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications