பிரதீபாவுக்கு உடற்கூறாய்வு நிறைவு... எதிர்த்த உறவினர்கள் கைது
நீட் தேர்வை ரத்து செய்யும் வரை உடற்கூறாய்வு செய்ய கூடாது என்று பிரதீபாவின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
Recommended Video

திருவண்ணாமலை: நீட் தேர்வை ரத்து செய்யும் வரை உடற்கூறாய்வு செய்யக் கூடாது என்று பிரதீபாவின் பெற்றோர் வலியுறுத்திய நிலையில் அந்த மாணவியின் உடலுக்கு உடற்கூறாய்வு சோதனை நிறைவு பெற்றது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பெருவலூரைச் சேர்ந்தவர் பிரதீபா. இவர் பிளஸ் 2 தேர்வில் 1125 மதிப்பெண்களை பெற்றுள்ளார். எனினும் நீட் தேர்வில் அவர் தேர்ச்சி பெற முடியவில்லை.

இதனால் மருத்துவ கனவுடன் இருந்த பிரதீபாவின் மனம் வெம்பியது. இதையடுத்து அவர் எலி மருந்தை குடித்தார். பின்னர் திருவண்ணாமலை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் இறந்தார்.
இதுகுறித்து பிரதீபாவின் பெற்றோர் கூறுகையில், நீட் தேர்வு ரத்து செய்யும் வரை உடற்கூறாய்வு செய்யக் கூடாது. நீட் தேர்வால் உயிர் பலிகள் தொடருகின்றன.
உயிர்கள் பறிபோவதை தடுக்க நீட் ரத்து அவசியம் ஆகும். நீட் தேர்வு முடிவுகள் முன்னதாக வெளியிட்டுவிட்டனர். இதனால் எங்களது மகளை பாதுகாக்க முடியாமல் பறிகொடுத்துவிட்டோம்.
நீட் தேர்வை ரத்து செய்யும் வரை பிரதீபாவின் உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர், உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் பிரதீபாவுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு சோதனை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்கு அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களது நிபந்தனைகளை அரசு நிறைவேற்றும் வரை உடற்கூறாய்வு செய்யக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து போலீஸார் அவர்களை கைது செய்தனர். பின்னர் பிரதீபாவின் உடலுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அரை மணி நேரம் உடற்கூறாய்வு நடைபெற்றது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications