”மோடி போல் போட்டியிட ஜெயலலிதா கற்றுக் கொள்ள வேண்டும்”- பிரேமலதா பிரச்சாரம்
சென்னை: விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் உமாசங்கரை ஆதரித்து நேற்று மாலை மரக்காணத்தில் பிரேமலதா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் ஜெயலலிதா,நரேந்திர மோடியை போன்று போட்டியிட வேண்டும் என்று கூறினார்.
அவர் பேசியபோது, " ஜெயலலிதா மக்கள் முன்பு ஒரு தவறான செய்தியை பரப்பி வருகிறார். அதிமுகவை தவிர வேறு எந்தக் கட்சிக்கு ஓட்டு போட்டாலும் அது வீணாகிவிடும் என்று சொல்கிறார். தமிழ்நாட்டுக்கு முதல் அமைச்சராக வந்து 3 வருடம் ஆகிறது.

இதுவரை எந்த திட்டத்தையும் அவர் நிறைவேற்றவில்லை. அதற்குள் பாரத பிரதமர் என்ற கனவுக்கு ஜெயலலிதா போய்விட்டார். கனவு காண்பது அனைவருக்கும் இயல்பு. ஆனால் ஜெயலலிதா காண்பது பகல் கனவு என்பதை தேர்தல் முடிவுகள் பாடமாக புகட்டும்.
40 தொகுதியை வைத்துக்கொண்டு பிரதமர் கனவு காண்கிறார். இது தமிழ்நாட்டுக்கான தேர்தல் அல்ல. இந்தியாவிற்கான தேர்தல். மொத்தம் 272 மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றால்தான் இந்தியாவில் ஆட்சி அமைக்க முடியும்.
தமிழ்நாட்டின் மக்களின் கேள்வியாக உங்கள் முன் நாங்கள் கேள்வியை வைக்கிறோம். இந்தியாவிலேயே காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகள்தான் பெரிய கட்சிகள். காங்கிரஸ் போட்டி போடுகிற நிலையில் இல்லை. அதை விட்டுவிடுவோம். பாஜகவை பொறுத்தவரை ஒரே அலைதான் வீசுகிறது. மோடி அலை. தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் மோடி.
இப்படி எதுவுமே இல்லாமல் ஜெயலலிதா, வெறுமனே வந்து பிரதமராவேன் என்கிறார். நரேந்திர மோடி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அதில் வெற்றி பெற்ற பின்னர்தான் பிரதமராகப் போகிறார். அவரும் முதல் அமைச்சர்தான், ஜெயலலிதாவும் முதல் அமைச்சர்தான். ஜெயலலிதாவே வாங்க. நரேந்திரமோடியைப் போல போட்டியிடுங்க. முதலில் மக்கள் உங்களை ஜெயிக்க வைக்கட்டும். அதன் பிறகு நீங்கள் பிரதமர் கனவு காணலாம். எம்.பி., தேர்தலில் போட்டியிடமாட்டாங்க.
நடுவன் அரசில் பங்கும் வகிக்க மாட்டாங்க. 39 தொகுதியை வைத்து எப்படி பிரதமர் ஆக முடியும். ஆகவே அதிமுகவை தவிர வேறு கட்சிக்கும் ஓட்டு போடுவது வீண் என்று ஒரு தவறான கருத்தை மக்கள் முன் விதைக்கிறார்கள். முதல் அமைச்சர் என்றால் தெளிவாக, உண்மையான கருத்தை மக்கள் முன் கூறவேண்டும். தவறான கருத்தை கூறக் கூடாது. ஏனென்றால் அந்தப் பதவி அப்படி" இவ்வாறு பேசினார் பிரேமலதா.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications