"பிரபா.. கொஞ்சம் நிக்கணும்.. இது கேப்டனின் மோதிரம்” விஜய பிரபாகரனுக்கு அணிவித்த பிரேமலதா விஜயகாந்த்
தருமபுரி: "இது கேப்டனின் மோதிரம்.. கேப்டன் வாரிசு விஜய பிரபாகரனுக்கு இதனை அணிவிக்கிறேன்.." எனக் கூறி மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அணிந்திருந்த மோதிரத்தை விஜய பிரபாகருக்கு அணிவித்தார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா.
தருமபுரியில் நடைபெற்ற தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகர் கட்சியின் இளைஞரணி செயலாளராக தேர்வு செய்யப்படுவதாக அறிவித்தார்.

தேமுதிக-வின் பத்தொன்பதாவது ஆண்டு செயற்குழு குழு பொதுக்குழு கூட்டம் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கட்சி சார்ந்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில இளைஞரணி துணை செயலாளராக விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். தேமுதிகவின் துணை செயலாளராக இருந்த எல்.கே. சுதீஷ் அக்கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரபா.. நிக்கணும்
விஜய பிரபாகர் மேடை ஏறி தந்தை விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மரியாதையை செலுத்திவிட்டு சிறிது நேரத்தில் இறங்க முற்பட்டார் அப்போது "பிரபா.. பிரபா கொஞ்சம் நிக்கணும்" என தடுத்து நிறுத்தி பேசத் துவங்கினார் பிரேமலதா விஜயகாந்த்.
"இது கேப்டனுடைய மோதிரம். இந்த நாளில் தனது தந்தையின் மோதிரத்தை அணிய ஆசைப்பட்டார் விஜய பிரபாகர். கேப்டனின் மூத்த மகன் என்ற முறையிலே அட்சய திருதியை நாளில் கேப்டனின் வாரிசுக்கு அவரது மோதிரத்தை பரிசளிக்கிறேன்" எனப் பேசினார்.
விஜயகாந்த் மோதிரத்துடன் விஜய பிரபாகர்
இதையடுத்து, உணர்ச்சிப் பெருக்குடன் மோதிர விரலை தொண்டர்களிடம் காட்டினார் விஜய பிரபாகர். தொடர்ந்து, தனக்கு மோதிரத்தை அணிவித்த தனது தாய் பிரேமலதா காலில் விழுந்து ஆசி பெற்றார் விஜய பிரபாகர், அவர் கன்னத்தில் முத்தமிட்டு அன்பைப் பகிர்ந்தார் பிரேமலதா. தொடர்ந்து, தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், பிரேமலதா காலில் விழுந்து ஆசி பெற்றார்.
மற்ற அணிகளுக்கான பதவிகள் நாளை மே தினத்தில் தலைமை செயலகத்தில் அறிவிக்கப்படும், கூட்டணி குறித்த அறிவிப்பு உரிய நேரத்தில் சரியான முறையில் அறிவிக்கப்படும்.
மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெறும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து தேர்தலை சந்திப்போம். நானும், விஜயபிரபாகரும் அனைத்து தொகுதிகளுக்கும் செல்வோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் விஜயகாந்த் சிலை திறக்க பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது என பிரேமலதா தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications