விஜயகாந்த் செய்ததை அதிமுக, திமுகவால் செய்ய முடியுமா?, சவால் விடுகிறேன்: பிரேமலதா
வேலூர்: ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என விஜயகாந்த் போன்று அதிமுக, திமுகவால் உறுதிமொழி எடுக்க முடியுமா என்று தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம், வாங்க மாட்டோம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் உறுதிமொழி எடுத்துள்ளார். இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் போட்டியிடும் தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் கூறுகையில்,
தேர்தல் குறித்து வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகள் அனைத்துமே கருத்து திணிப்புகள் ஆகும். மே 19ம் தேதி கருத்துக்கணிப்புகள் எல்லாம் தவிடுபொடியாகிவிடும். எங்கள் கூட்டணி 130 முதல் 160 இடங்களில் வெற்றி பெறும்.
அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் ஒரு முன்னேற்றமும் இல்லை. எங்கள் கூட்டணிக்கு வாக்களித்தால் ஊழல், லஞ்சத்தை ஒழிப்போம். வேலையில்லாமல் அல்லாடும்இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்போம்.
ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம், வாங்க மாட்டோம் என்று விஜயகாந்த் உறுதிமொழி எடுத்துள்ளார். அவரை போன்று திமுக, அதிமுகவால் உறுதிமொழி எடுக்க முடியுமா? இது நான் அவர்களுக்கு விடும் சவால் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications