சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிப்பதற்கு ஆயத்தம்.. போக்குவரத்து நிறுத்தம்.. அதிகாரிகள் ஆய்வு!
சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிப்பதற்கான ஆயத்தப் பயணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை: சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிப்பதற்கான ஆயத்தப் பயணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கட்டடத்தை இடிப்பதற்காக அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை தி.நகரில் உள்ள தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் 7 அடுக்குகளை கொண்ட அந்தக் கட்டடம் எலும்புக்கூடானது. கட்டடத்தின் பெரும்பாலன பகுதிகள் உறுதித் தன்மையை இழந்து இடிந்து விழுந்தது.
இதையடுத்து அந்தக் கட்டடத்தை இடிக்கலாமா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். முற்றிலும் உறுதியிழந்து நின்ற அந்தக்கட்டடத்தை இனியும் விட்டு வைப்பது ஆபத்து எனக்கூறப்பட்டதால் அதனை நேற்று மாலையை இடிக்க முற்பட்டனர்.

தீயால் ஒத்திவைப்பு
ஆனால் நேற்றிரவு கட்டடத்தின் பல பகுதிகளில் தீச்சுவாலைகள் விட்டு விட்டு எரிந்தன. இதனால் கட்டடத்தை இடிக்கும் பணி ஒத்திவைக்கப்பட்டது.

ஆயத்தப்பணிகள் தீவிரம்
இந்நிலையில் இன்று காலையிலேயே கட்டடத்தை இடிப்பதற்கா ஆயத்தப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ஜா கட்டர் எந்திரம்
'ஜா கட்டர்' எந்திரம் மூலம் மேலிருந்து கீழாக கட்டடத்தை இடிக்க திட்டமிட்டுள்ளனர். 'ஜா கட்டர்' கொண்டு செல்ல சென்னை சில்க்ஸின் பின்புறம் ரப்பீஸ் எனும் கட்டட இடிபாடுகள் கொட்டப்பட்டு வருகின்றன.

கொட்டப்பட்ட ரப்பீஸ்கள்
நேற்றிரவு முதல் 150 லாரிகளுக்கும் மேலான கட்டட இடிபாடுகள் கொட்டப்பட்டு உள்ளன. கட்டடத்தை இடிப்பதற்காக அப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications