நாளை தந்தைக்கு திதி.. பைக் விபத்தில் இன்று மகன் பரிதாப மரணம்.. நண்பரும் பலியானார்!
தனியார் பஸ் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பூர்: தனியார் பள்ளி பஸ் எதிர்பாராதவிதமாக மோதி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குன்னத்தூரை சேர்ந்த பிரதீப்குமார் என்பவரும், மும்மூர்த்தி நகரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் குமாரபாளையத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தனர். நண்பர்களான இருவரும் கல்லூரிக்கு பைக்கில்தான் சென்று வருவது வழக்கம்.

இந்நிலையில் வழக்கம்போல் இருவரும் கல்லூரி முடிந்து வீடு திரும்பினர். குன்னத்தூர் அடுத்த சித்தாண்டிபாளையம் அருகே பைக்கில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே ஈரோட்டிலிருந்த வந்த ஒரு தனியார் பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதியது. இதில் 2 மாணவர்களும் தூக்கி வீசப்பட்டனர்.
இருவரும் பலத்த காயமடைந்ததில் சம்பவ இடத்திலேயே பிரதீப்குமார் பரிதாபமாக பலியானார். உயிருக்கு போராடிய வெங்கடேஷை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே வெங்கடேஷும் உயிரிழந்தார். அவரது உடலை கண்டு உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
வெங்கடேஷின் தந்தைக்கு நாளை முதலாமாண்டு திதி கொடுக்க இருந்த நிலையில், அதற்கு முதல் நாளே மகன் உயிரிழந்ததை கூறி உறவினர்கள் கதறி அழுதனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications