கிரானைட் முறைகேடு: சகாயம் விசாரணைக்கு வராத பி.ஆர்.பி... நெஞ்சு வலியாம்...!
மதுரை: கிரானைட் முறைகேடு தொடர்பான சகாயம் விசாரணைக் குழு முன்பு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியும் கிரானைட் அதிபர் பி.ஆர். பழனிச்சாமி ஆஜராகவில்லை. அவருக்கு நெஞ்சு வலி என்பதால் அவர் வரவில்லை. மாறாக அவரது வக்கீல்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்தது. அதன்படி அவர் தனது குழுவினருடன் மதுரை மாவட்டத்தில் விசாரணையை நடத்தி வருகிறார். இதுவரை 6 கட்ட விசாரணையை முடித்துள்ளார். விசாரணையின்போது கிரானைட் குவாரி அதிபர்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் போலீசார் சகாயத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மேலும் சகாயம் நேரடி கள ஆய்வு மேற்கொண்டு சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுத்தது தொடர்பாக விவரங்களை சேகரித்தார். இந்த நிலையில் நேற்று சகாயம் தனது இறுதிக்கட்ட விசாரணையை தொடங்கினார். நேற்று காலை முகாம் அலுவலகத்துக்கு வந்த அவர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
மேலும் விசாரணை நடத்துவதற்காக 6 கிரானைட் அதிபர்களுக்கு சம்மன் அனுப்பினார். அதில் பி.ஆர்.பியும் ஒருவர். இருப்பினும் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் வரவில்லை. மாறாக அவரது வக்கீல்களே ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இறுதிக்கட்ட விசாரணையை இந்த வாரத்திற்குள் சகாயம் முடிப்பார் என தெரிகிறது. அதன் பின் இதுவரை கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த புகார்கள், தான் நேரடியாக சென்று ஆய்வு செய்த விவரங்கள் ஆகியவை அடங்கிய அறிக்கையை தயார் செய்யும் பணியில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை சகாயம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அளிக்க உள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications