கொலை செய்வேன்.. அந்த சடலத்துடன் ஜாலியாகவும் இருப்பேன்.. வக்கிரத்தின் உச்சத்துக்கு போன ஆனந்தன்

பெண்களை கொன்ற சைக்கோ கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    இறந்த சடலுங்களுடன் உல்லாசமாக இருக்கும் கொடூரன்- வீடியோ

    அரக்கோணம்: "பெண்கள் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்வேன்.. அந்த பிணத்துடன் உல்லாசமாக இருப்பேன்.. கடைசியாக நகைகளை திருடி கொண்டு வந்துவிடுவேன்" என்று கொலையாளி ஆனந்தன் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், நகரி பகுதியை சேர்ந்தவர் சரோஜம்மாள். இவருக்கு வயது 65. சில மாதங்களுக்கு முன்பு இவர் கொலை செய்யப்பட்டு விட்டார். யாரோ இவர் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்று விட்டனர்.

    இது சம்பந்தமாக விசாரணை நடத்திய நகரி போலீசார் அரக்கோணம் அடுத்த வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரை கைது செய்தனர். அப்போது, அவரிடம் மூக்குத்தி, தாலி போன்ற நகைகளை பார்த்ததும் கிடுக்கிப்பிடி விசாரணையை நடத்தினர்.

    அம்மிக்கல்

    அம்மிக்கல்

    அப்போதுதான் பல திடுக் திடுக் தகவல்கள் வெளியாகின. 35 வயதான இந்த ஆனந்தன், இதே அரக்கோணத்தில் ஒரு பெண்ணின் தலை மீது அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துள்ளார். பிறகு அந்த பெண்ணின் சடலத்துடனேயே உல்லாசமாகவும் இருந்துள்ளார். அதன்பிறகு பெண் அணிந்திருந்த நகைகளையும் திருடி சென்றிருக்கிறார். இப்போது சரோஜம்மாவும் இதேபோலதான் கொல்லப்பட்டுள்ளார்.

    டெய்லர் நிர்மலா

    டெய்லர் நிர்மலா

    அதனால் நகரி போலீசார் அரக்கோணம் டவுன் போலீசாருக்கு விஷயத்தை சொல்லவும், விசாரணை மேலும் துரிதமானது. அப்போது போலீசாரிடம் ஆனந்தன் சொன்னதாவது: "எனக்கும் இந்திராணி என்ற பெண்ணுக்கும் உறவு இருந்தது. இதில் இந்திராணி ரயிலில் அடிபட்டு இறந்து விட்டார். அவருக்கு நிர்மலா என்ற தோழியுடன் தகராறு இருந்தது. இதனால் நிர்மலாவை கொல்ல வேண்டும் என்று இந்திராணி என்னிடம் சொல்லி கொண்டே இருப்பார். அதனால் அரக்கோணத்தில் டெய்லராக உள்ள நிர்மலா வீட்டுக்கு நான் போனேன்.

    உல்லாசம்

    உல்லாசம்

    அங்கு தன்னுடைய அம்மாவுடன் நிர்மலா தூங்கி கொண்டிருந்தார். அம்மாவை சரமாரியாக தாக்கியதில் அவர் மயங்கி விழுந்துவிட்டார். ஒரு அறைக்குள் அவரை இழுத்து சென்று பூட்டிவிட்டேன். பிறகு நிர்மலாவை அம்மிக்கல்லை தூக்கி போட்டு கொலை செய்தேன். பிறகு பிணத்துடன் ஜாலியாக இருந்தேன்.. நகைகளை எடுத்து கொண்டு கிளம்பிவிட்டேன். இப்படித்தான் சரோஜம்மாளையும் கொன்று உல்லாசமாக இருந்தேன்" என்றார்.

    சைக்கோ?

    சைக்கோ?

    நிர்மலா மட்டுமில்லை.. அரக்கோணத்தில் பல பெண்களை கொலை செய்து, அந்த சடலங்களுடன் ஜாலியாக இருப்பதுதான் ஆனந்தனின் பழக்கமாகவும் உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுவரை எத்தனை பேரை இப்படி கொலை செய்துள்ளார் என்று தெரியவில்லை. அதனால் ஆனந்தனை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களை கொலையும் செய்து விட்டு பிணத்துடன் உல்லாசம் அனுபவித்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+