சுடச்சுட பஜ்ஜி, பக்கோடா, போண்டா போட்டு விற்று புதுச்சேரி முதல்வர் நூதன போராட்டம்
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பஜ்ஜி, பக்கோடா விற்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார்
புதுச்சேரி: முதல்வர் நாராயணசாமி பஜ்ஜி, பக்கோடா விற்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பிரதமர் மோடி பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது பக்கோடா விற்பவர் கூட நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் வருவாய் ஈட்டுவதாக தெரிவித்தார்.
பாஜக தலைவர் அமித்ஷாவும் பக்கோடா விற்பனை செய்வது தவறல்ல என்றார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

புதுச்சேரி முதல்வர் போராட்டம்
சமூக வலைதளங்களிலும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசை கண்டிக்கும் விதமாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

பட்ஜெட்டில் திட்டம் இல்லை
மத்திய அரசின் பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திட்டங்கள் ஏதும் இல்லை என குற்றம்சாட்டிய முதல்வர் நாராயணசாமி இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

புதுச்சேரியில் நூதன போராட்டம்
இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் நடைபெறும் இந்த போராட்டத்தில் அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். புதுச்சேரி காந்தி வீதி நேரு வீதி சந்திப்பில் இந்த நூதன போராட்டம் நடைபெற்றது.

வெங்காய பக்கோடா
மாநில காங்கிரஸ் தலைவரும் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெங்காய பக்கோடா செய்கிறார். இதனை படித்த பட்டதாரி இளைஞர்கள் வாங்கி விற்பனை செய்து வருவதாக போராட்டம் நடத்தினர்.

பஜ்ஜி விற்கும் முதல்வர்
இதேபோல் முதல்வர் நாராயணசாமி பஜ்ஜி மற்றும் போண்டா செய்து விற்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போண்டா, பஜ்ஜி, பக்கோடாக்களை அவர்களே சுவைத்தும் பார்த்தனர்.

வேடிக்கை பார்த்த கூட்டம்
இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காட்டிலும் போராட்டத்தை வேடிக்கை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications