வெளிவிற்பனையால் பாதிக்கும் வியாபாரம்- புதுகை உழவர் சந்தை விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்
புதுகை: புதுக்கோட்டை உழவர் சந்தையில் வெளியில் விற்பனை செய்பவர்களை தடுத்து நிறுத்தக் கோரி விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டையில் கடந்த 16 ஆண்டுகளாக உழவர் சந்தை இயங்கி வருகிறது. காய்கறிகளை சாகுபடி செய்யும் விவசாயிகள் இடைத்தரகர்களிடம் தங்களத காய்கறிகளை குறைந்த விலைக்கு கொடுக்காமல் நேரடியாக விற்பனை செய்வதற்காக தான உழவர் சந்தை உருவாக்கப்பட்டது.
அதன்படி இங்கு வியாபாரம் செய்யும் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்யும் நிலத்தை பட்டாவை வேளாண் விற்பனை குழு அதிகாரிகளிடம் முறையாக சமர்பித்து அதன் பின்னர் அரசால் அடையாள அட்டை வழங்கப்பட்ட பிறகு தான் உழவர் சந்தைக்குள் விவசாயிகள் வியாபாரம் செய்ய முடியும்.

16 ஆண்டுகளாக வியாபாரம்
இதே போன்று புதுக்கோட்டை உழவர் சந்தையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரசிடம் இருந்து அடையாள அட்டை பெற்றுக்கொண்டு உழவர் சந்தைக்குள் கடந்த 16 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகின்றனர்.
வெளிக்கடைகளுக்கு லாபம்:
சமீபகாலமாக உழவர் சந்தைக்கு வெளியே பல வியாபாரிகள் அடையாள அட்டை இல்லாமல் தற்காலிக கடை போட்டு காய்கறி வியாபாரம் செய்து வருவதால் தங்களு;க்கு விற்பனை பாதிக்கபபடுவதாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்:
மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் அரசு போக்குவரத்துக்கழகம் பஸ் போக்குவரத்தை உழவர் சந்தை பகுதிக்கு வருவதை நிறுத்தி விட்டதால் தாங்கள் காய்கறிகளை சந்தைக்கு எடுத்து வரமுடியாமல் அவதிபபட்டு வருவதாகவும் அதிகாரிகளிடம் பல முறை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
உள்ளிருப்பு போராட்டம்:
இதனால் அதிருப்தியடைந்த பாதிக்கப்பட்ட விவசாயிகள் இன்று உழவர் சந்தைக்குள் தங்களது காய்கறிகளை விற்பனை செய்யாமல் சந்தைக்கு வெளியே வியாபாரம் செய்து வருவோர்களை தடுத்து நிறுத்த கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் காய் கறிகளை வாங்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர்.
சமாதானம் அடைந்த விவசாயிகள்:
இதனையடுத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தியதோடு உழவர் சந்தைக்கு வெளியே அனுமதியின்றி வியாபாரம் செய்வோர்களை தடுத்து நிறுத்தி கடைகளை காலி செய்தனர். இதனையடுத்து விவசாயிகள் சமாதானம் அடைந்து மீண்டும் தங்களது விற்பனையை தொடங்கினர். இதனால் இன்று காலை அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications