புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் பி.ஏ. கொடூர கொலை.. காரில் ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்பு
மாவட்ட கலெக்டர் பிஏ வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரின் பி.ஏ. மர்மநபர்களால் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக இருப்பவர் பூபதி கண்ணன். இவர் திருச்சி காஜாமலையை சேர்ந்தவர். நேற்று வழக்கம்போல் காரில் பணிக்கு சென்ற பூபதி கண்ணன் நீண்ட நேரம் ஆகியும் இரவு வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி போன் செய்து கேட்டபோது, விரைவில் வீட்டுக்கு வந்துவிடுவதாக பூபதி பாண்டியன் தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், திருச்சி மாத்தூர் அருகே உள்ள அரைவட்ட சாலையில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. நேற்று முதல் கார் அங்கேயே நின்று கொண்டிருந்ததால், சந்தேகமடைந்த அவ்வழியாக சென்ற பொதுமக்கள் காருக்குள் சென்று எட்டி பார்த்தனர். அப்போது ஒருவர் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் படுகொலை செய்யப்பட்டு கிடந்தவரை மீட்டு விசாரணையை துவக்கியதில் அதில் மாவட்ட ஆட்சியரின் பி.ஏ. பூபதி கண்ணன் என தெரியவந்தது. பூபதி பாண்டியன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட காரணங்கள் என்ன என்பதும் குறித்தும், விரோதிகள் யார் என்பது குறித்தும் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளர்களை கண்டுபிடிக்க 4 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications