விஜய் - முருகதாஸ் வீடுகளை முற்றுகையிடுவோம்! - புரட்சி பாரதம்
கத்தி, புலிபார்வை ஆகிய சினிமா படங்களை தமிழகத்தில் திரையிடக்கூடாது என வலியுறுத்தி நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் வீடுகளை முற்றுகையிடப் போவதாக புரட்சி பாரதம் கட்சி அறிவித்துள்ளது.
இந்தப் படத்தை எதிர்த்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகம் அருகில் நேற்று புரட்சி பாரதம் சார்பில் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு கட்சி தலைவர் பூவை.ஜெகன்மூர்த்தி தலைமை தாங்கினார். அப்போது கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஜெகன் மூர்த்தி பேசுகையில், "புலிபார்வை திரைப்படத்தில் தமிழர்களையும், தமிழ் போராளிகளையும் குறிப்பாக விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் துப்பாக்கி ஏந்தி வருவதாக காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
பாலசந்திரனை தீவிரவாதி போன்று சித்தரிக்கும் இந்த படத்தை தமிழகத்தில் திரையிடக்கூடாது. அது போல ராஜபக்சேவின் ஆதரவாளரின் நிறுவனம் தயாரிக்கும் கத்தி படத்தையும் வெளியிடக்கூடாது.
இந்த படத்தில் நடிகர் விஜய் நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இவர்கள் தமிழர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். தமிழர்கள் இல்லை என்றால் அதில் அவர்கள் தொடர்ந்து பணியாற்றலாம்.
இருவருக்கும் தமிழ் உணர்வு இருந்தால் அவர்கள் உடனடியாக அந்தப் படத்திலிருந்து விலக வேண்டும். தொடர்ந்து பணியாற்றினால் புரட்சி பாரதம் மற்ற தமிழ் அமைப்புகளுடன் சேர்ந்து போராடும்.
தமிழர்களுக்கு துரோகம் செய்யும் யாராக இருந்தாலும் நாங்கள் எதிர்ப்போம். இப்படத்தில் இருந்து விலகாவிட்டால் நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீடுகளை முற்றுகையிடுவோம்," என்றார்.
-
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்!












Click it and Unblock the Notifications