வேலுச்சாமியை தூக்கிய தேர்தல் ஆணையம்.. அடடா, இது விஷாலுக்கு கிடைத்த வெற்றியாச்சே!
ஆர்.கே.நக்ர் தொகுதி தேர்தல் அதிகாரியாக இருந்த வேலுச்சாமியை மாற்றம் செய்ததன் மூலம் விஷால் தனது கோரிக்கையில் வெற்றி பெற்றுவிட்டதாகவே கருதப்படுகிறது.
Recommended Video

சென்னை : ஆர்.கே.நகர் தொகுதியின் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியை மாற்றியுள்ளதன் மூலம் விஷால் வேட்பு மனு நிராகரிப்பில் முறைகேடு நடந்தது உண்மைதானோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் வேட்புமனு தாக்கல் செய்த விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. விஷாலை முன்மொழிந்த தீபனும், சுமதியும் தங்களது கையெழுத்து இல்லை என்று பின்வாங்கியதால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி கூறினார்.
இதையடுத்து விஷால் சாலை மறியல் செய்து பின்னர் போலீஸாரின் அறிவுரையின்படி தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் அவரது மனு ஏற்கப்பட்டுவிட்டதாக அதிகாரி தெரிவித்தார்.

விஷாலின் வேட்புமனு நிராகரிப்பு
இதையடுத்து சிறிது நேரத்தில் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரி அறிவித்தார். இது பலருக்கும் குழப்பத்தை எழுப்பியது. எதன் அடிப்படையில் தேர்தல் அதிகாரி இத்தகைய இருவேறு முடிவுகளை எடுத்தார் என்ற கேள்விகளும் எழுந்தன.

தேர்தல் அதிகாரியை மாற்ற கோரிக்கை
இதையடுத்து தமிழக அரசுக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் என்று திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியன தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் கோரிக்கை விடுத்தன. தான் அலுவலகத்தில் இருந்த போது ஒரு முடிவை எடுத்துவிட்டு நான் இல்லாத நிலையில் ஒரு முடிவை எடுப்பது எந்த வகையில் நியாயம் என்று கேட்டு தேர்தல் அதிகாரி வேலுச்சாமியை மாற்ற வேண்டும் என்று விஷாலும் கோரிக்கை விடுத்தார்.

ராஜேஷ் லக்கானி விசாரணை
இதையடுத்து விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை தேர்தல் அதிகாரி வேலுச்சாமி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் விளக்கமளித்தார். இந்த அதிகாரியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததால் கடந்த சில தினங்களுக்கு முன்பே அவர் மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பிரவீன் நாயர் நியமனம்
இந்த நிலையில் தேர்தல் அதிகாரியாக இருந்த வேலுச்சாமி இன்று திடீரென மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக பிரவீன் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அதிரடி மாற்றங்கள் என்ன உணர்த்துகின்றன என்று தெரியவில்லை. விஷாலின் வேட்புமனு நிராகரிப்பு விவகாரத்தில்தான் வேலுச்சாமி மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே விஷால் பிராடுத்தனம் செய்யவில்லை என்பதும் கிட்டத்தட்ட ஊர்ஜிதமாகிறது.

விஷால் வெற்றி
விஷால் மீது எந்த தவறும் இல்லை என்றால் அவருக்கு ஆர்.கே.நகரில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஒரு வேளை விஷால் போர்ஜரி செய்தே ஆவணங்களை தாக்கல் செய்திருந்தாலும் கூட, இந்தத் தேர்தலில் ஏதோ ஒரு முறைகேடு நடந்துள்ளதால்தான் தேர்தல் அதிகாரி மாற்றப்பட்டிருக்கிறார் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications