Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரயில்வே பட்ஜெட்டா? கார்ப்பரேட் கம்பெனி வரவு செலவு கணக்கா?: குமரி பயணிகள் கொந்தளிப்பு

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: ரயில்வே பட்ஜெட் வெளிப்படைதன்மையிலாமல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் கார்பரேட் கம்பெனிகளின் வரவுசெலவு கணக்கு போல் உள்ளது என்று கன்னியகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Rail Budget 2015: kanyakumari rail passangers reactions

குமரி மாவட்ட ரயில்வே வளர்ச்சிக்கு பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இதில் குமரி மாவட்ட பயணிகள் பயன்படும் விதமாக ரயில்கள் இயக்குதல், புதிய ரயில்வே வழித்தடங்களில் இருப்புபாதை அமைத்தல், ரயில்நிலை முனைய வசதிகளை விரிவாக்கம் செய்தல், ரயில் நிலையங்களை விரிவுபடுத்துதல், ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு தேவையாக அடிப்படை வசதிகளை செய்தல் போன்ற பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்ய வேண்டும் என்று பல ஆண்டகளாகவே வலியுறுத்தப்பட்டது.

தற்போது குமரி மாவட்டத்தை சார்ந்த லோக்சபா உறுப்பினர் மத்திய அமைச்சராக இருப்பதால் இந்த பட்ஜெட்டில் குமரி மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு இன்னமும் அதிகமாகியது.

2015- 2016-ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் தக்கலின் போது வரும் ஆய்வுகள் முடிந்த பிறகே புதிய ரயில்கள் அறிவிக்கப்படும். ஆய்வுகள் முடிந்த பிறகு நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே புதிய ரயில்கள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில்கள் பற்றிய அறிவிப்பை மார்ச் மாதம் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குமரி மாவட்ட பயணிகளால் மிகுந்த எதிர்பார்ப்பிற்குரிய ரயில் சேவைகள்.

என்னென்ன ரயில்கள் தேவை

திருச்சி - திருநெல்வேலி இன்டர்சிட்டி ரயிலை திருவனந்தபுரம் நீட்டிப்பு

திருவனந்தபுரம் - மங்களுர் இரவு நேர ரயில் கன்னியாகுமரிக்கு நீட்டிப்பு

கொச்சுவெலி - வேளாங்கண்ணி தடத்தில் தினசரி ரயில் இயக்க கோரிக்கை (வழி நாகர்கோவில்)

திருக்குறள் எக்ஸ்பிரஸ்

கன்னியாகுமரி - நிசாமுதீன் திருக்குறள் ரயிலை தினசரி ரயிலாக மாற்றி இயக்கம்.

கன்னியாகுமரி - புதுச்சேரி வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்கம்

நாகர்கோவில் -சென்னை தினசரி புதிய ரயில்

எர்ணாகுளம் - மும்பை டொரோண்டோ ரயிலை குளிர்சாதன சூப்பர்பாஸ்டு ரயிலாக மாற்றி தூத்துக்குடி வரை நீட்டிக்க கோரிக்கை

மதுரை - சென்னை டொரோண்டோ ரயிலை முழுவதும் குளிர்சாதன சூப்பர்பாஸ்டு ரயிலாக மாற்றி திருவனந்தபுரம் வரை நீட்டித்து இயக்குதல்

வெளிப்படைத்தன்மை

இந்த பட்ஜெட்டில் எந்த ஒரு திட்டமும் குறிப்பிட்டு அறிவிக்கப்படவில்லை. அனைத்தும் பொதுவாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த திட்டத்துக்கு எவ்வளவு எந்த திட்டமும் எடுத்து கொள்ளப்பட்டுள்ளது என்பதை பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. பொது மக்களுக்கு தெரியும் படியாக வெளிப்படைதன்மை இல்லாமல் உள்ளது. கடந்த கால பட்ஜெட்களில் இந்த திட்டம் எல்லாம் எடுத்து கொள்ளப்படும் இந்த திட்டம் எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்படும். இவ்வாறு அறிவிக்கப்பட்டாலே ஒன்றும் நடைபெறவில்லை. நிலைமை இவ்வாறு இருக்கையில் இந்த பட்ஜெட்டில் வெளிப்படைதன்மையிலாமல் அறிவிக்கப்பட்டுள்ளது. வித்தியாசமாக நாங்கள் பட்ஜெட் போடுகிறோம் என்று சொல்லி தாக்கல் செய்த பட்ஜெட் வெத்துவேட்டு பட்ஜெட்டாக மாறிவிட்டது. இந்த பட்ஜெட் கார்பரேட் கம்பெனிகளின் வரவுசெலவு கணக்கு போல் உள்ளது. மக்களாட்சி உள்ள நாட்டில் ரயில்வே அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட் போல் இல்லை.

புதிய திட்டங்கள்

ரயில் பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு வேண்டி புதிய ரயில் பாதை திட்டங்களை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இல்லை என்று முன்னரே அறிவித்திருந்தார். இதனால் புதிய பாதைகள் பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. தற்போது நடைபெற்றுவருகின்ற திட்ட பணிகள் அனைத்தும் முடிந்தபிறகே புதிய பாதை பற்றிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது. இதனால் கன்னியாகுமரி - மதுரை இருவழிப்பாதை திட்டம் பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த திட்டம் செயல்படுத்தபடுமா என்பது சந்தேகமே.

கூடுதல் நிதி

தனியர் மயமாக்கல் அதிகமாக காணப்படுகிறது. ரயில் நிலையங்கள் சுத்தப்படுத்துதல், பிரிவு பி ரயில் நிலையங்களில் இணைய வசதி இது போன்ற பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்படுவதை பெரிதுபடுத்தி மிகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மக்களுக்கு கூடுதல் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அதாவது புதிய இருப்புபாதை வழித்தடங்கள், இருவழிபாதைகள், முனைய வளர்ச்சி போன்றவற்றில் அதிக அக்கறை செலுத்தி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

ரயில்வே பாதை நெருக்கடி

பட்ஜெட்டில் அதிகமான ரயில் பாதைகள் இடநெருக்கடியான உள்ளது என்று குறிப்பிடப்ட்டுள்ளது. அதிலும் 1219 வழித்தடங்கள் அதிக நெருக்கடி நிறைந்த பாதைகளாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாதைகளில் 100 சதவிகித்துக்கும் அதிகமாக 492 பாதைகளும், 228 பாதைகள் 80 முதல் 100 சதவிகிதமாகலும் நெருக்கடி நிறைந்ததாக உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இது போன்ற அதிக நெருக்கடி நிறைந்த பாதைகள் விரிவாக்கம் செய்யப்படும் என்று குறிப்பிடபட்டுள்ளது. இவ்வாறு இடநெருக்கடியாக உள்ள நாகர்கோவில் - மதுரை பாதை இருவழிபாதையாக மற்றும் நாகர்கோவில் ரயில் முனைய விரிவாக்கம் பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் இல்லை என்பமு பயணிகளின் குமுறலாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+