அடடா, பொய் சொல்லி இன்று ஆபீஸுக்கு லீவு போட்டது இப்படி வீணாப் போச்சே!
சென்னை: தீபாவளியையொட்டி பொய் சொல்லி இன்றைக்கு அலுவலகத்திற்கு லீவு போட்டது வீணாகிவிட்டதே என்று கொட்டும் மழையை பார்த்தபடி கவலையில் உள்ளனர் பலர்.
நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. சனி, ஞாயிறு விடுமுறை, நாளையும் விடுமுறை இந்நிலையில் திங்கட்கிழமை மட்டும் அலுவலகத்திற்கு செல்ல வேண்டுமா என்று நினைத்து பலரும் பல காரணங்களை கூறி இன்று லீவு போட்டுள்ளனர்.
லீவு போட்டதே சந்தோஷமாக பொழுதை கழிக்கத் தான்.

லீவு
லீவு போட்டவர்கள் ஜாலியாக வெளியே சுற்றலாம், ஷாப்பிங் போகலாம், பட்டாசு வெடிக்கலாம் என்று திட்டமிட்டனர். ஆனால் நேற்றில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்றும் வீசுவதால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மழை
இன்று காலையாவது மழை நின்றுவிடும் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிச்சம். வெளியே தான் செல்ல முடியவில்லை வீட்டில் டிவியாவது பார்க்கலாம் என்றால் மின்சாரமும் இல்லை.

முடக்கம்
பல்வேறு பகுதிகளில் தெருக்களில் மழை நீர் வெள்ளம் போன்று ஓடுவதால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். எவ்வளவோ திட்டமிட்டு இன்று ஜாலியாக இருக்கலாம் என்று லீவு போட்டால் இப்படி மழை வந்து அனைத்தையும் கெடுத்துவிட்டதே என்று பலர் கவலையில் உள்ளனர்.

பட்டாசு
இன்று இருக்கட்டும் நாளையும் மழை தொடர்ந்தால் பட்டாசே வெடிக்க முடியாது போல என்று கவலை மக்களுக்கு தற்போதே வந்துவிட்டது.

மாணவர்கள்
மழையால் 15 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து மாணவ, மாணவியர் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் மழையால் வீடுகளில் முடங்கியிருப்பதை நினைத்து அவர்களுக்கும் வருத்தம் தான்.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications