புயல் கரையை கடந்தும் வலுவிழக்காமல் அடம்பிடிக்கிறது வர்தா புயல் - வானிலை ஆய்வு மையம்
வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: வர்தா புயல் கரையைக் கடந்தும் அது வலு குறைந்த புயலாக மாறி வருகிறது. வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவாகியிருந்த வர்தா புயல் நேற்று மாலை 3 மணியில் இருந்து 5 மணிக்குள் சென்னை துறைமுகம் அருகே கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தாலும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் நேற்று மாலை அளித்த பேட்டியில், வங்க கடலில் உருவான வர்தா புயல் நேற்று மதியம் 3 மணியிலிருந்து 5 மணி வரைக்குள் கரையை கடந்தது. கரையை கடக்கும் போது தரைக்காற்று மணிக்கு 100 கி.மீ., - 120 கி.மீ., வரை வீசியது. தற்போது மணிக்கு 70 கி.மீ., - 85 கி.மீ., வரை வீசுகிறது. காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 50 கி.மீ., வேகத்தில் வீசும்.
அதிதீவிர வர்தா புயலானது, வலு குறைந்து புயலாக மாறி உள்ளது. அது வலு இழக்கும். மழை படிப்படியாக குறையும். வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும். அடுத்த 24 மணி நேரத்தில் அனேக இடங்களில் கனமழை பெய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications