சீக்கிரமா அரசியலுக்கு வரனும் சாமீ... கிடா வெட்டிய தேனி ரஜினி ரசிகர்கள்
ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வர வேண்டும் என்பதற்காக தேனி மாவட்டம் கூடலூரில் ரசிகர்கள் கிடா வெட்டி வழிபட்டனர்.
கூடலூர்: ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என பிரார்த்தனை செய்து கிடா வெட்டினர் தேனி மாவட்ட ரசிகர்கள்.
தற்போது தமிழகத்தில் அதிமுகவின் செயல்பாடு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதை போல் அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி கடந்த மே மாதம் பேச ஆரம்பித்தவுடன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் 3 மாதங்களாகியும் இதுவரை அவர் அதிகாரப்பூர்வமாக வெளியிட வில்லை.

இந்நிலையில் நடிகர் கமலோ அவ்வப்போது ஆட்சியாளர்களை தாக்கி பேசி, தமிழர்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களை தட்டி கேட்டு வருகிறார். மேலும் விரைவில் தனிக் கட்சி தொடங்குவதாக அறிவிப்பையும் கமல் வெளியிட்டுள்ளார்.
ரஜினியை கூட்டணி அழைக்கும் வேகத்தில் கமல் செல்வதால் ரஜினி விரைவில் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இதில் தேனி மாவட்டம், கூடலூரை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் லோயர் கேம்ப் பகுதிக்கு அருகே உள்ள சாமிக்கு 5 கிடா வெட்டி வழிபாடு நடத்தினர்.
ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என கிடா வெட்டி வழிபாடு நடத்திய ரசிகர்கள் #Rajinikanth superstarrajini #TnPolitics pic.twitter.com/bKMUeHTanD
— raja r (@Raja7dte) September 19, 2017
அப்போது ரஜினி விரைவில் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் முதல்வராக வேண்டும் என்றும் ரஜினி வழியில் நதி நீர் இணைப்பை செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து அங்கு வெட்டப்பட்ட கிடாவை உணவாக தயாரித்து கோயிலுக்கு வந்தவர்களுக்கு விருந்து அளித்தனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications