கமல்ஹாசன் திறமைசாலி, மக்கள் நம்பிக்கையை பெறுவார்.. புகழ்வது ரஜினிகாந்த்!
Recommended Video

சென்னை: ரஜினிகாந்த் இன்று சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நெல்லை மாவட்ட ரசிகர்களை சந்தித்தார்.
ரசிகர் மன்ற நிர்வாகிகளின் பெயர்களை கேட்டு தெரிந்து கொண்டார் ரஜினி. பிறகு அரசியல் கட்சிக்கு, கட்டமைப்புதான் முக்கியம் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
இதன்பிறகு மண்டபத்தை விட்டு வெளியே வந்த ரஜினியிடம் கேள்விகளை எழுப்ப நிருபர்கள் சூழ்ந்தனர். ஆனால் ரஜினிகாந்த் நிருபர்களை சந்திக்காமல் சென்றார்.

விரட்டிய நிருபர்கள்
ஆனால் ரஜினிகாந்த் நிருபர்களை சந்திக்காமல் வேகமாக போய் விட்டார். ஆனால் தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டு விடாமல் நின்றிருந்ததால், சற்று தொலைவில் அமர்ந்தபடி அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

நிர்வாகிகள் நியமனம்
அப்போது அவர் கூறியதாவது: மாவட்டத்தின் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுப்பது முதல் பணி. 32 மாவட்டங்களுக்கும் நிர்வாகிகளை நியமித்து வருகிறேன். அவர்களை ஒரே நேரத்தில் சந்திப்பதற்கு சில காலம் ஆகும். நேரம் வரும்போது சுற்றுப்பயணம் சென்று நேரடியாக ரசிகர்களை சந்திப்பேன்.

காவிரி அனைத்து கட்சி கூட்டம்
காவிரி விஷயத்திற்காக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது நல்ல விஷயம். வரவேற்கத் தக்கது. இதேபோல, எல்லா விஷயங்களிலும் ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என்றார்.

ரொம்ப நல்லா இருந்தது
கமல் அரசியல் கட்சி பற்றியும் அவரது பொதுக்கூட்டம் பற்றியும் உங்கள் கருத்து என்ன என்ற நிருபர்கள் கேள்விக்கு, கமல் அரசியல் கட்சி மாநாடு ரொம்ப நல்லா இருந்தது. வித்தியாசமாக இருந்தது. ஏற்கனவே கமலுக்கு வாழ்த்து கூறிவிட்டேன், மீண்டும் வாழ்த்தியுள்ளேன். அவர் திறமைசாலி என்பதால் மக்கள் நம்பிக்கையை விரைவில் பெறுவார், என்றார் ரஜினிகாந்த்.

சேரும் இடம்
நானும் கமலும் வேறு பாதையில் பயணித்தாலும் சேரும் இடம் ஒன்றுதான். மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதுதான் இருவரின் நோக்கமும் என்றார் ரஜினிகாந்த்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்!












Click it and Unblock the Notifications