வலியால் துடித்த ரசிகர், பாதுகாவலரை அதட்டிய ரஜினி..!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ரஜினியின் இளகிய மனம்-வீடியோவை பாருங்க..

  சென்னை: கை முறிந்த நிலையில் ரசிகர் ஒருவர் இன்று நடிகர் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுக்க வந்தார். அப்போது அவரை தள்ளியதால் பாதுகாவலரை ரஜினிகாந்த் அதட்டினார்.

  நடிகர் ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்த் கடந்த 26ஆம் தேதி முதல் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார்.

  சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட வாரியாக ரசிகர்களை சந்தித்து வருகின்றார் ரஜினிகாந்த். ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் முன்பாக ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு அறிவுரையும் வழங்குகிறார்.

  ரசிகரை விசாரித்த ரஜினி

  ரசிகரை விசாரித்த ரஜினி

  இந்நிலையில் இன்று திருமங்கலத்தை சேர்ந்த அம்பேத்கர் என்ற ரசிகர் முறிந்த கையுடன் போர்த்தியபடி ரஜினியுடன் போட்டோ எடுக்க மேடைக்கு வந்தார். அவரை பார்த்த ரஜினிகாந்த் என்ன ஆனது என நலம் விசாரித்தார்.

  வலியில் துடித்த ரசிகர்

  வலியில் துடித்த ரசிகர்

  அப்போது ரசிகரின் கை முறிந்திருப்பதை அறியாத ரஜினியின் பாதுகாவலர், ரசிகரின் முறிந்த கையை பிடித்து தள்ளினார். இதனால் வலி தாங்க முடியாமல் துடித்தார் ரசிகர்.

  பாதுகாவலரை அதட்டிய ரஜினி

  பாதுகாவலரை அதட்டிய ரஜினி

  இதனை சற்றும் எதிர்பாராத ரஜினிகாந்த் பாதுகாவரை அதட்டினார். மேலும் வண்டியில் இருந்து கீழே விழுந்ததாக கூறிய அந்த ரசிகரை வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று ரஜினி அறிவுறுத்தினார்.

  மகிழ்ச்சியடைந்த ரஜினி

  மகிழ்ச்சியடைந்த ரஜினி

  இதைத்தொடர்ந்து தனது மகள்கள் கொடுக்கக்கூறிய கடிதத்தையும் அந்த ரசிகர் ரஜினியிடம் கொடுத்தார். போட்டோ எடுத்தால் போதும் என வந்த அவரை ரஜினிகாந்த் அணைத்து நலம் விசாரித்து பேசியதால் அந்த ரசிகர் மகிழ்ச்சியடைந்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Rajinikanth rebuked his security for pushing his hand fractured fan. Rajinikanth taking photos with his fans. One of his fans come to stage with fractured hand.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற