மந்திராலயாவில் ரஜினி... "ஆண்டவன்" சொல்லிட்டாரா?.. "அருணாச்சலம்" அரசியலுக்கு வருகிறாரா??
ரஜினிகாந்த் டிசம்பர் 12-ல்தனது பிறந்தநாளில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மந்திராலயம் சென்று ராகவேந்திரரை வணங்கியுள்ளார்.
Recommended Video

சென்னை : புதிய அரசியல் கட்சி தொடங்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படும் நடிகர் ரஜினிகாந்த் அதற்கான அறிவிப்பை வரும் டிசம்பர் 12-ஆம் தேதி கூறுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வரது மந்த்ராலயா பயணம் ரசிகர்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்தை பல்வேறு ஆண்டுகளாக அரசியலுக்கு வருமாறு அவரது ரசிகர்கள் அழைப்பு விடுத்து வருகின்றனர். ஆனால் அவரோ அதற்கு மௌனம் சாதித்தே வந்தார். மேலும் அரசியலுக்கு தான் வர விரும்பவில்லை என்பதை தனது படங்களின் வசனங்கள் மூலம் வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு, ரஜினிகாந்த் தனது ரசிகர்களை கடந்த மே மாதம் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த் ஆண்டவன் என்னை என்னாவாக ஆக்க விரும்புகிறாரோ அதன்படி நான் தற்போது நடிகனாகியுள்ளேன். நாளைக்கு நான் என்னாவாக ஆகவேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ அதன்படி நான் செயல்படுவேன் என்றார்.

ரஜினி சூசகம்
இந்த பேச்சை கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அரசியலுக்கு வருவது குறித்து அவரது மறைமுக பதிலாகவே கருதினர். சுமார் 5 நாள்கள் நடைபெற்ற அந்த சந்திப்பின்போது கடைசி நாளில் பேசியதுதான் ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்தது. ரஜினி பேசுகையில் தற்போது நான் நடிக்க வேண்டும். அது எனது தொழில். உங்களுக்கும் தொழில்,வேலை இருக்கிறது. எனவே அவற்றை பாருங்கள். போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்றார்.

பணிகள்
ரஜினி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்று தமிழருவி மணியன், அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் கூறினர். இதையே ரஜினியின் நெருங்கிய நண்பரும் கூறினார். இந்நிலையில் அரசியல் கட்சித் தொடங்குவதற்கான ஆயத்த பணிகளை ரஜினி மேற்கொண்டு வருகிறார் என்று தகவல்கள் வெளியானது.

தனிக்கட்சி
வரும் டிசம்பர் 12-ஆம் தேதி ரஜினி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அன்றைய தினம் அரசியல் கட்சி குறித்து அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் ஆந்திர மாநிலத்தில் உள்ள மந்த்ராலயத்தில் தனது ஆஸ்தான தெய்வமான ராகவேந்திரரை வணங்கினார்.

முக்கியத்துவம்
ஆண்டவன் கூறும்போது அரசியலுக்கு வருவேன் என்று ரஜினி கூறியிருந்த நிலையில் அவரது மந்த்ராலயம் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. டிசம்பர் 12-ஆம் தேதி அரசியல் கட்சித் தொடங்குவதற்காக தனது இஷ்ட தெய்வமான ராகவேந்திரரிடம் ஆசி வாங்கியதாகவே ரசிகர்கள் கருதுகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications