நளினி விடுதலை தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் முடிவெடுக்க முடியாது: தமிழக அரசு பதில்
சென்னை: நளினி விடுதலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால்,முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக முடிவெடுக்க முடியாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி தற்போது வேலூர் சிறையில் உள்ளார். ராஜீவ் கொலை வழக்கில் கடந்த 1998-ஆம் ஆண்டு நளினிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.

பின்னர் தமிழக அரசு கடந்த 2000-ம் ஆண்டு, அரசியலமைப்பு சட்டம் 161-ன் படி, நளினிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்தது. இந்நிலையில் நல்லெண்ண அடிப்படையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்த 2,200 ஆயுள்தண்டனை கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்தது.
இதே அடிப்படையில், கடந்த 25 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் தன்னையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு ஜூன் 14-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 27-க்கு தள்ளிவைத்து, மனு தொடர்பாக அரசின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில் தமிழக அரசின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் உள் துறை துணைச் செயலாளர் டி. டேனியல் பதில் மனு தாக்கல் செய்தார். இந்த பதில் மனுவில், தமிழக அரசால் கடந்த 1994-ஆம் ஆண்டு நவம்பரில் ஒரு அரசாணை வெளியிடப்பட்டது.
இதில், பாலியல் பலாத்காரம், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் 20 ஆண்டுகள் சிறையில் கழித்திருந்தால் மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுதலை செய்யலாம் என்று அரசாணை தெரிவிக்கிறது. இதன்படி, மனுதாரர் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்துள்ளதால், தன்னை முன் கூட்டியே விடுதலை செய்யுமாறு கோரியுள்ளார்.
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கை, மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ விசாரித்து வந்ததால், 1994-ஆம் ஆண்டு தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணையின் கீழ், முன்கூட்டியே தன்னை விடுதலை செய்யுமாறு மனுதாரர் உரிமை கோர முடியாது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து, 2014-ஆம் ஆண்டு பிப்ரவரியில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்யும் முன்பு மத்திய அரசின் கருத்தை அரிய வேண்டும் என்பதற்காக, கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்ரவரியில் தமிழக அரசு கடிதம் எழுதியது. ஆனால், மத்திய அரசானது உரிய பதிலளிக்கவில்லை.
மாறாக, தமிழக அரசின் கடிதத்தை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வானது, முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்பன உள்ளிட்ட 7 கேள்விகளை எழுப்பியதோடு, அரசியல் சாசன அமர்வுக்கு அந்த வழக்கை மாற்றம் செய்தது.
அந்த அமர்வானது, 2014-ஆம் ஆண்டு ஜூலையில் மாநில அரசுகள் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்வதற்கு தடை விதித்தது. இதன் பின்னர் அந்த உத்தரவில் ஒரு சில மாற்றங்களை செய்து, வழக்கை உச்சநீதிமன்ற அமர்வுக்கு மாற்றியது.
இந்த வழக்கு, இன்று வரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபடவில்லை. ஆகையால், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள மத்திய அரசின் வழக்கில் ஒரு முடிவு எட்டும் வரை, இந்த வழக்கில் நளினி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது. எனவே, அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பதில் மனுவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு வரும் 27-ஆம் தேதியன்று விசாரணைக்கு வரவுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications