ராஜீவ்காந்தி கொலை வழக்கு; பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை பற்றி ஆலோசித்து முடிவு: நிர்மலா சீதாராமன்
திருச்சி: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்வது குறித்து தனிப்பட்ட முறையில் எந்த முடிவையும் எடுக்க முடியாது. அதுகுறித்து ஆலோசித்து தான் முடிவு செய்யப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இதில், பேரறிவாளனின் தந்தை கடந்த 16 மாதங்களாக படுத்தபடுக்கையாக உள்ளார். தனது தந்தையை பார்க்க 30 நாட்கள் பரோலில் விட வேண்டும் என்று சிறைத் துறையினரிடம் பேரறிவாளன் மனு அளித்திருந்தார். ஆனால் மத்திய அரசின் சட்டவிதிமுறை காரணமாக பரோல் தர முடியாது என்று சிறைத்துறை மறுத்து விட்டது.
பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் தங்களை கவனித்துக் கொள்ள மகனை பரோலில் விட வேண்டும் என்று அமைச்சர்களை சந்தித்து அற்புதம்மாள் மனு அளித்து வருகிறார். இந்த விவகாரத்தை அ.தி.மு.க ஆதரவு எம்எல்ஏ-க்களான கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் கையில் எடுத்துள்ளனர். நடப்பு சட்டசபைத் தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரவும் அரசியல் கட்சிகள் முயன்று வருகின்றன.
இந்நிலையில் திருச்சியில் ஜி.எஸ்.டி தொடர்பான விளக்க கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது நிச்சயம். எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடம் குறித்து மத்திய சுகாதாரக் குழு அறிவிக்கும் என்று தெரிவித்தார்.
மேலும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிககளை விடுவிப்பது மனித உரிமை தொடர்புடையது. தனிப்பட்ட முறையில் எந்த முடிவையும் எடுக்க முடியாது. இதுகுறித்து ஆலோசனை செய்து அதன்பின்னர் தான் முடிவு எடுக்க முடியும் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications