ராஜ்நாத் நாளை சென்னை வருகிறார்... தொகுதி உடன்பாட்டை அறிவிக்கிறார்.. கூட்டணி இருக்குமா, உடையுமா?
சென்னை: பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் நாளை சென்னை வருகிறார். பாஜக கூட்டணிக் கட்சிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள தொகுதி உடன்பாட்டு விவரத்தை அவர் வெளியிடுகிறார்.
இதை கூட்டணிக் கட்சிகள் ஏற்குமா அல்லது தனித் தனியாக பிரிந்து செல்லுமா என்பது அவரது பேட்டிக்குப் பிறகு தெரிய வரும்.
ஏற்கனவே தேமுதிகவும், பாமகவும் கடுமையாக முறைத்துக் கொண்டுள்ளன. கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியும் கோபமாக உள்ளது. இந்த நிலையில் ராஜ்நாத் சிங் நாளை சொல்லப் போவது குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வானவில் கூட்டணி
பாஜக முதல் முறையாக தனது முழு முயற்சியில் ஒரு புதிய கூட்டணியை தமிழகத்தில் உருவாக்கியுள்ளது. வெளியிலிருந்து பார்த்தால் இதுதான் பலமான கூட்டணியாகத் தோன்றும். ஆனால் கட்சிகளின் தலைவர்கள்தான் விதம் விதமாக தினுசு தினுசாக செயல்படுகிறார்கள்.

கூட்டணியில் யார் யார்
பாமக, மதிமுக, தேமுதிக, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, அகில இந்திய என் ஆர் காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி ஆகியவை இதில் இடம் பெற்றுள்ளன.

யார் யாருக்கு எத்தனை சீட்
இந்தக் கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை சீட் என்பது தொடர்பாக பல மாதங்களாக பேச்சு நடந்தும் கூட இந்த நிமிடம் வரை சுமூகமான ஒரு உடன்பாடு ஏற்பட்டதாக தெரியவில்லை.

தொகுதிகளில் சிக்கல்
கடைசியாக கிடைத்த தகவலின்படி தேமுதிகவுக்கு 14, பாஜக, பாமகவுக்கு தலா 8, மதிமுகவுக்கு 7,. இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, என். ஆர். காங்கிரஸ் ஆகியவற்றுக்குத் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. புதிய நீதிக் கட்சிக்கு சீட் தரப்படவில்லை. ஆனால் தொகுதிகளிலும், எண்ணிக்கையிலும் பாமக அதிருப்தி அடைந்துள்ளது. அதேபோல போலத்தான் பிற கட்சிகளும். மதிமுக அமைதியாக இருக்கிறது.

நாளை ராஜ்நாத் சிங் அறிவிப்பு
இந்தப் பட்டியலை உத்தேச பட்டியல் என்று பாஜக தெரிவித்துள்ளது. எனவே நாளை ராஜ்நாத் சிங் வெளியிடும் பட்டியல்தான் இறுதியானாக இருக்க முடியும். எனவே நாளைய ராஜ்நாத் சிங்கின் அறிவிப்புக்குப் பின்னர்தான் பாஜக கூட்டணி கட்டுக்குலையாமல் நீடிக்குமா அல்லது கட்சிகள் பிரியுமா என்பதைக் கணிக்க முடியும்.

பிரசாரமும் நாளையே தொடக்கம்
ராஜ்நாத் சிங்கின் அறிவிப்பைத் தொடர்ந்து நாளையே பாஜக தனது பிரசாரத்தையும் அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications