'அம்மா மெஸ்'ஸில் இட்லி, தோசை சுட்டுத் தருவதுதான் வளர்ச்சியா?... ராமதாஸ் கிண்டல்
திண்டிவனம்: தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டியது அரசின் கடமை. ஆனால் அம்மா உணவகங்களை ஆரம்பித்து, இட்லி, தோசை போடுவதுதான் வளர்ச்சிப் பாதையா என்று கேட்டுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
பாமக தலைமைச் சிறப்புச் செயற்குழுக் கூட்டம் திண்டிவனத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ராமதாஸ் ஆற்றிய உரை:

சகஜமய்யா…
தேர்தலில் வெற்றி, தோல்விகள் சகஜமானவை. நாம் வெற்றி பெற்றபோது ஆர்ப்பரித்ததில்லை. அதேபோல தோல்வி அடைந்தபோதும் துவண்டதில்லை.

அரசின் கடமை என்ன..
ஆனால், தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

இட்லி சுட்டுக் கொடுப்பதுதான் வளர்ச்சியா..
தமிழக அரசு அம்மா உணவகம் மூலம் இட்லி, தோசை போடுவது, தண்ணீர் விற்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது வளர்ச்சிக்கான பாதை இல்லை.

ஆனால் நாங்க திட்டம் வச்சிருக்கோமே..
தமிழகத்தின் வளர்ச்சிக்கு எங்களிடம் பல்வேறு திட்டங்கள் உள்ளன. அதனை நாங்கள் ஒரு புத்தகமாகவே போட்டு வைத்துள்ளோம்.

மின்வெட்டால் எல்லோருக்கும் பாதிப்பு
அதிமுக ஆட்சியில் கடுமையான மின்வெட்டால் விவசாயிகள் உள்பட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேலை கேட்டு 20 லட்சம் பேர் வெயிட்டிங்
வேலைவாய்ப்பு இல்லாமல் 20 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு காத்திருக்கின்றனர்.

நம்பவே முடியலையே..
இந்த சூழ்நிலையில் அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்றது நம்ப முடியாதது.

வெறும் பணத்துக்காவா…
வெறும் பணத்துக்காக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். வாக்குப் பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.

கோர்ட்டுக்குப் போவோம்..
இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வரை செல்வதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம்.

234 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழக்க வேண்டும்
2016-ஆம் ஆண்டு தேர்தலில் பாமக வெற்றி பெறுவதற்கான செயல் திட்டங்களை வகுக்க வேண்டும். இத்தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளில் பாதி இடங்களில் டெபாசிட் இழக்க வேண்டும். ஏற்கெனவே இதை பெண்ணாகரத்தில் தருமபுரி மக்கள் செய்து காட்டினர். வரும் தேர்தலில் பாமக மற்ற தொகுதிகளிலும் இதை செய்து காட்ட வேண்டும் என்றார் டாக்டர் ராமதாஸ்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications