காரைக்குடி பள்ளியில் மாணவர்கள் கொண்டாடிய ரம்ஜான்!
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் ரமலான் பண்டிகை செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காரைக்குடி கல்லூரி சாலை பள்ளிவாசல் ஜமாத் தலைவர் நைனா முகமது இவ்விழாவிற்கு தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ஆ. பீட்டர் ராஜா அனைவரையும் வரவேற்றார்.

காரைக்குடி ரோட்டரி பேர்ல் சங்கமம் தலைவர் நாச்சியப்பன், செயலாளரும் மற்றும் சேவுகன் அண்ணாமலை கல்லூரியின் விலங்கியல் துறை தலைவருமான நாவுக்கரசு வாழ்த்துரை வழங்கினார்கள். பைத்துல்மால் மையத்தின் செயலர் ஜமால் ராஜா, சிக்ரி ஓய்வு அறிவியலாளர் டாக்டர். ஜமாலுதீன் மற்றும் காரைக்குடி ரோட்டரி பேர்ல் சங்கமத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் ரமலான் விழாவில் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் காஜா மைதீன் ரமலான் பண்டிகை கூறித்து சிறப்புரை ஆற்றினார்கள். தனது உரையில் மாணவர்களுக்கு ரமலான் பண்டிகையின் நோக்கம், நோன்பின் முக்கியத்துவம், தொழுதலின் அவசியம் குறித்தும், நம்மால் இயன்றவரை இல்லாதோருக்கு உதவுதல், பிறருடன் இணக்கமான உறவை ஏற்படுத்தி சகோதரத்துவத்தை வளர்த்தல், சமாதானத்தை கடைபிடித்தல், சுய ஒழுக்கம், நல்ல பழக்கவழக்கங்கள் போன்ற நற்ப்பண்புகளை எடுத்துக் கூறினார்கள்.

மாணவர்கள் ரமலான் விழாவில் இஸ்லாம் இறை வாழ்த்து வாசித்தும், பண்டிகை கொண்டாடும் நோக்கம் குறித்து, பாட்டு பாடியும், குரான் ஓதியும், நடனம் ஆடியும் போன்ற பல்வேறு கலை நிகழ்சிகளை நடத்தி காண்பித்தனர். விழாவில் காரைக்குடி ரோட்டரி பேர்ல் சங்கமத்தின் பயிற்றுனர் முத்துக்குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை பட்டதாரி ஆசிரியர் மீனாட்சி தொகுத்து வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் கோமதி செய்திருந்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications