கச்சதீவு அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கொடூர தாக்குதல்!
கச்சதீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளது.
ராமேஸ்வரம் : கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் மீனவர்களின் படகுகள் சேதமடைந்து உள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் ஓகி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில் மீனவ மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர். கடலில் மீன் பிடிக்கச்சென்ற மீனவர்களை மீட்கும் பணி தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், இரு வாரங்களுக்குப் பிறகு ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 11ம் தேதி கடலுக்கு மீண்டும் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்களின் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி விரட்டி அடித்தது. இது குறித்து கடலோர காவற்படையிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து நேற்று ராமேஸ்வரம்,பாம்பன் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீதும், படகுகள் மீதும் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த தமிழக மீனவர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக கிளம்ப படகுகளை இயக்கி உள்ளனர். அப்போது சில படகுகளுக்குள் புகுந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தினர்.
இன்று காலை கரை திரும்பிய மீனவர்கள் இலங்கை கடற்படையினர் தங்கள் படகுகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 50க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் படகுகளில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications