ராமேஸ்வரத்தில் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கிய மீனவர்கள்.. நிரந்தர தீர்வு எப்போது தான் கிடைக்கும்?
ராமேஸ்வரம்: மீனவர்கள் கைது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் இன்று முதல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தபட்டுள்ளன. மீனவர்களின் வேலை நிறுத்தத்தால் நேரடியாகவும் மறைமுகமாவும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்துள்ளனர்.
கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்வதை இலங்கை கடற்படை வாடிக்கையாக கொண்டுள்ளது. இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் நிலையில் மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார்.

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது
எனினும், இலங்கை கடற்படையின் அட்டூழியம் முடிந்தபாடில்லை. இந்த நிலையில்தான், ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தது. அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்தது. இதையடுத்து கைதான 7 மீனவர்களும் நேற்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மீனவர்கள் 7 பேரையும் வருகிற வரும் 21 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் 7 மீனவர்களும் இலங்கை வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இது தமிழக மீனவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, நேற்று துறைமுக பகுதியில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நிறைவேறுமாறு:-
19 ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம்
* மீன் பிடி தடைகாலம் முடிந்து மீன் பிடிக்க சென்று இலங்கை கடற்படையால் கைதான மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* இலங்கை கடற்படை பறிமுதல் செய்த நாட்டுப்படகு, விசைப்படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
* மீனவர்கள் கைது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். மீனவர் பிரச்சினைக்கு நாடளுமன்றத்தில் ஒட்டு மொத்த தமிழ் எம்பிக்களும் குரல் கொடுக்க வேண்டும்
* பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் புதன்கிழமை முதல் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
* அதேபோல, சுதந்திர தின நாளில் தங்கச்சிமடத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டம், 19 ஆம் தேதி தங்கச்சிமடத்தில் மதியம் 3 மணியளவில் ரயில் மறியல் போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இன்று முதல் வேலைநிறுத்த போராட்டம்
இதற்கிடையில், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் இன்று முதல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் மீனவர்கள் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. இதன்படி இன்று ராமேஸ்வரத்தில் மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளது.
இதனால், 700 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் நிறுத்தபட்டுள்ளன. மீனவர்களின் வேலை நிறுத்தத்தால் நேரடியாகவும் மறைமுகமாவும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்துள்ளனர். வேலை நிறுத்தம் காரணமாக பல கோடி ரூபய் வருவாய் இழப்பு ஏற்படும் நிலை எற்பட்டுள்ளது.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications