தமிழர் பகுதியில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெறுக: ரணிலுக்கு விஜயகாந்த் கோரிக்கை
சென்னை: ஈழத் தமிழர் பகுதியில் இருந்து ராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி அதிக இடங்களில் வென்றது. இதைத் தொடர்ந்து இலங்கையின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

4வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கேவுக்கு வாழ்த்து தெரிவித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை:
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வாழ்த்து pic.twitter.com/cMYjh0VFOL
— DMDKParty (@dmdkparty2005) August 21, 2015 இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, பிரதமராக பதவியேற்றுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
மேலும் இலங்கை தமிழர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை உருவாக்கும் வகையிலும், தமிழர்கள்படும் துன்பங்களுக்கு விடிவை ஏற்படுத்தும் வகையிலும் அவர் நல்லாட்சி நடத்துவார் என நம்பிக்கை உள்ளது.
இலங்கை தமிழர் வாழ்விடங்களில், அமைதி நிலவக்கூடிய வகையில் அங்கிருந்து இலங்கை ராணுவத்தை திரும்பப்பெற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications