உச்சகட்ட கொடூரம்.. 14 வயசு பெண்ணை.. ஒரு வருஷத்தில் பலமுறை சீரழித்த 3 சிறுவர்கள்.. பெற்றோரும் உடந்தை
14 வயது சிறுமியை சீரழித்த 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் அதிரடி கைது செய்யப்பட்டனர்
ராணிப்பேட்டை: 14 வயது பெண்ணை 3 சிறுவர்கள் சேர்ந்து ஒரு வருஷத்தில் பலமுறை பலாத்காரம் செய்து சீரழித்துள்ளனர்.. இது முதல் ஷாக்! இந்த 3 சிறுவர்களில் ஒருவரது பெற்றோரே இதற்கு உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.. இது அடுத்த ஷாக்!! ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது.
வாலாஜாபேட்டை அருகே உள்ள கிராமத்தில் அந்த ஏழை பெண் வசித்து வருகிறார்.. கணவரை பிரிந்து தனியாக வாழ்கிறார்.. கூலி வேலை செய்து தன்னுடைய 14 வயது மகளை காப்பாற்றி வருகிறார்.
அந்த சிறுமி, அதேபகுதியில் உள்ள ஒரு தனியார் ஸ்கூலில் 8-ம் கிளாஸ் படித்து வருகிறார்.. இந்நிலையில், கடந்த 4 மாசமாகவே வயிறு வலிப்பதாக சிறுமி சொல்லி உள்ளார்.. அதனால் தற்காலிகமாக மாத்திரைகளை வாங்கி தந்து வந்துள்ளார் அம்மா.

வயிறு வலி
ஆனால், கடந்த 30-ம் தேதி, "ரொம்ப வயிறு வலிக்குதும்மா" என்று கதறி அழுதபடியே சுருண்டு விழுந்துவிட்டார்.. இதை பார்த்து துடித்து போன அந்த பெண், உடனடியாக மகளை வாலாஜாபேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.. சிறுமியை செக்அப் செய்த டாக்டர்கள் அதிர்ந்து போய்விட்டனர்.. சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.. அதுவும் நிறைமாத கர்ப்பிணி.

டாக்டர்கள்
இந்த தகவலை அம்மாவிடமும் சொன்னார்கள்.. அதை கேட்டு அவர் அதிர்ந்து பதறி போனார்.. உடனடியாக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மகளை அழைத்து செல்லுமாறும் டாக்டர்கள் சொல்லி உள்ளனர். அதன்படியே வேலூருக்கு மகளை அழைத்து செல்லவும், அங்கு 14 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை
பிறகு வேலூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு டாக்டர்களே தகவலையும் சொன்னார்கள். அவர்கள் விரைந்து வந்து சிறுமியிடம் விசாரணையை ஆரம்பித்தனர். அதேபோல, சிறுமியின் அம்மா, ராணிப்பேட்டை மகளிர் போலீசிலும் புகார் தரவும், அவர்களும் விசாரணையை ஆரம்பித்தனர்.

சக தோழி
அப்போதுதான் அந்த பகீர் தகவல் வெளியானது.. அம்மா தினமும் கூலி வேலைக்கு போய்விட்ட பிறகு, சிறுமி வீட்டில் தனியாக இருப்பதால், தன் கிளாஸில் படிக்கும் சக தோழி வீட்டுக்கு விளையாட சென்றுள்ளார்.. அந்த தோழியின் வீடு அதே பகுதியில்தான் உள்ளது.. அந்த வீட்டு தோழியின் அண்ணன்தான் சிறுமியை சீரழித்துள்ளான்.. அவனுக்கு வயசு 17 ஆகிறது.

நண்பர்கள்
தான் பெண்ணை நாசம் செய்ததுடன் இல்லாமல், தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் 2 பேரிடம் இதை பற்றி சொல்லி உள்ளான்.. உடனே அந்த 2 பேரும் சிறுமியை மிரட்டி தனித்தனியாக பலாத்காரம் செய்துள்ளனர்.. இப்படியே ஒரு வருஷமாக நடக்கிறதாம்.. 3 பேருமே மாறி மாறி, சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வந்துள்ளனர்.

கைது
அந்த 3 பேரில் ஒருவரின் பெற்றோருக்கு இந்த விஷயம் தெரிந்துள்ளது... ஆனால் மகன் செய்த அக்கிரமத்தை அவர்கள் தடுக்க காணோம்.. சிறுமிக்கும் உதவவில்லை.. நடந்ததையும் போலீசில் சொல்லவில்லை.. மகனுக்கு சாதகமாகவே அவர்கள் இருந்துள்ளனர்.. அந்த பெற்றோர் பெயர், வசந்தகுமார் - சுமதி என்பதாம்... இதெல்லாம் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, அந்த பெற்றோரை போலீசார் கைது செய்தனர்.

சிறுவர்கள்
சிறுமியை சீரழித்த 3 சிறுவர்கள், உடந்தையாக இருந்த பெற்றோர் என 5 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.. சிறுவர்களை செங்கல்பட்டு சிறுவர்கள் சீர்திருத்த பள்ளிக்கும், சுமதி தம்பதியை வேலூர் ஜெயிலுக்கும் போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமிக்கு பிறந்த குழந்தையை, அதிகாரிகள் மீட்டு திருப்பத்தூர் மாவட்ட அரசு தொட்டில் மையத்திற்கு அனுப்பி வைத்தனர்












Click it and Unblock the Notifications