கோவில் விழாவுக்கு மத்தியில் ஒரு கோர்ட்... ராசிபுரம் விநோதம்!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் இரா.புதுப்பட்டியில் உள்ள அருள்மிகு துலுக்க சூடாமணியம்மன் திருக்கோவிலில் தேரோட்டம் வெகுசிறப்பாக நடந்தது. அப்போது, ஆங்கிலேயர் காலம் முதல் விழாவின் போது கோவிலில் நடைபெற்று வரும் இரண்டு நாள் குற்றவியல் நீதிமன்றம் நேற்றும், இன்றும் செயல்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே இரா.புதுப்பட்டியில் இந்து சமய அறநிலையத் துறைக்குட்பட்ட அருள்மிகு துலுக்க சூடாமணியம்மன் திருக்கோவிலில் திருத்தேர்ப் பெருவிழா கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினந்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது. தேரில் அருள்மிகு துலுக்க சூடாமணியம்மன் எழுந்தருள மஹா தீபாராதனை, பூஜைகள் நடந்தன. பின்னர் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக ஏராளமான பக்தர்கள் தேரினை வடம்பிடித்து இழுத்து வந்தனர். தேரோட்டம் நடந்தபோது பக்தர்கள் உருளுதண்டம் போட்டு வழிபட்டனர்.
விழாவில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.பி.ராமலிங்கம், பி.ஆர்.சுந்தரம், நாமக்கல் வட்ட ஆட்சியர் வ.தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டு தேர் வடம்பிடித்து இழுத்தனர். ராசிபுரம் சுற்றுவட்டார பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே கோவில் வளாகத்தில் ராசிபுரம் நீதிமன்றம் சார்பில் 2 நாள் குற்றவியல் நீதிமன்றம் தொடங்கியது. ஆங்கிலேயர் காலத்தில் விழாவின்போது ஏற்படும் சிறு,சிறு வழக்குகளுக்கு நீதிமன்றம் அமைக்கப்பட்டு உடனடித் தீர்வு காணப்பட்டது. அப்போது சேலத்தில் மட்டுமேநீதிமன்றம் இருந்ததால் இங்கு குதிரையில் வந்து நீதிமன்றப் பணிகளை நடத்தினர்.
இன்றைய காலத்தில் குற்றச் சம்பவங்கள் இல்லையென்றாலும் கூட, பாரம்பரியாக நடந்து வரும் நிகழ்வாக இது தொடர்கிறது. ராசிபுரம் நீதிமன்றம் அங்கிருந்து தற்காலிகமாக இடம்பெயர்ந்து முழுமையாக இந்தக் கோவில் வளாகத்தில் இயங்கி பல்வேறு சிறு சிறு வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
நேற்று காலையில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இன்றும் இந்த நீதிமன்றம் செயல்பட்டது. இதைப் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications