தென்காசி தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது... 57 சதவீத வாக்குகள் பதிவு
நெல்லை: நெல்லை மாவட்டம் தென்காசி தொகுதி 56 வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. 57 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் தென்காசி சட்டசபை தொகுதியில் உள்ள பொன்னமரன் நடுநிலைப்பள்ளியில் எண் 56, 57 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 56வது வாக்குச்சாவடியில் மாதிரி வாக்குப்பதிவின்போது பதிவான 52 வாக்குகளை நீக்காமல் வாக்குப்பதிவை நடத்திவிட்டனர்.

வாக்குப்பதிவு முடிந்த பிறகு அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளை காண்பித்தபோது தான் இது தெரிய வந்தது. அந்த வாக்குச்சாவடிக்கான மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 972, அதில் பதிவான வாக்குகள் 592 என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தென்காசி தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் என்.டி.எஸ். சார்லஸ், அதிமுக முகவர் சின்னத்துரைப்பாண்டியன் உள்ளிட்டோர் தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கடேஷிடம் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த தேர்தல் ஆணையம் 56வது வாக்குச்சாவடிக்கு மே 18ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று அறிவித்தது. அதன்படி இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடந்தது.

இதில் 57 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 555 வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த முறை பதிவான வாக்குகளில் இருந்து 37 வாக்குகள் குறைவாகவே பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications