சாவில் சந்தேகம்... தந்தை அளித்த புகாரால் புதைக்கப்பட்ட சிறுமி உடலில் மீண்டும் பிரேத பரிசோதனை
ஈரோடு: மரணத்தில் சந்தேகம் என தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், புதைக்கப்பட்ட சிறுமியின் உடலைத் தோண்டி எடுத்து ஈரோடு போலீசார் பிரேத பரிசோதனை நடத்தியுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கெடாரையை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (30). கார் டிரைவரான இவரது மனைவி ஷோபனா, சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர். இவர்களுடைய மகள் கிருஷ்ணபிரியா (5).
திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக மகளோடு சென்னையில் பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார் ஷோபனா. அவ்வப்போது மாமனார் வீட்டிற்குச் சென்று மனைவியையும், மகளையும் பார்த்து வந்தார் வெள்ளியங்கிரி.
இந்நிலையில், சமீபத்தில் தனது தந்தை இறந்து விடவே மகளுடன் வெள்ளியங்கிரியின் வீட்டுக்கு வந்த ஷோபனாவிற்கு மாமனார் - மாமியாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், நம்பியூர் பகுதியில் வாடகை வீட்டில் தாய் மற்றும் மகளுடன் ஷோபனா குடியேறினார்.
கடந்த 8-ந் தேதி மாலை குழந்தை கிருஷ்ணபிரியாவுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு சுயநினைவை இழந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக குழந்தையை கோபியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார் ஷோபனா. அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
அதன்பிறகு வெள்ளியங்கிரியின் வீட்டுக்கு குழந்தையின் உடல் கொண்டுசெல்லப்பட்டு இறுதி சடங்குகள் செய்து, கெடாரை-இச்சிப்பாளையம் செல்லும் வழியில் உள்ள சுடுகாட்டில் புதைக்கப்பட்டது.
இந்நிலையில் கிருஷ்ணபிரியாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வெள்ளியங்கிரி போலீசில் புகார் அளித்தார். அந்த மனுவில்,‘நன்றாக விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை திடீர் என்று இறந்துவிட்டது. என்ன காரணம் என்று தெரியவில்லை? என்னுடைய மகள் சாவில் சந்தேகம் உள்ளது. அதனால் புதைக்கப்பட்ட உடலை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யவேண்டும்‘ என அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து நேற்று போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், தாசில்தார் அசோக்குமார் மற்றும் வெள்ளியங்கிரி, ஷோபனா ஆகியோர் முன்னிலையில் சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த கிருஷ்ணபிரியாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
பிரேத பரிசோதனைக்காக கோவையில் இருந்து வந்திருந்த தடயவியல் துறை சட்டம் சார்ந்த மருத்துவர்கள் ஜெயசிங், பேரானந்தம் ஆகியோர் சிறுமியின் உடலில் இருந்து கல்லீரல், சிறுகுடல், இதயம் உள்ளிட்ட உறுப்புகளின் மாதிரிகளை சேகரித்தார்கள்.
பின்னர் உறுப்புகள் ரசாயன சோதனைக்காக கோவை கொண்டு செல்லப்பட்டது. சோதனையின் முடிவு வந்த பிறகே சிறுமியின் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications