ரியல் எஸ்டேட் அதிபர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை.. சென்னையில் பயங்கரம்.. மர்மகும்பலுக்கு வலை வீச்சு
சென்னை பள்ளிக்கரணையில் ரியல் எஸ்டேட் அதிபர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். தப்பியோடிய 4 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
சென்னை: சொந்த திருமண மண்டபத்தில் அமர்ந்திருந்த ரியல் எஸ்டேட் அதிபர் சங்கரை மர்ம கும்பல் ஒன்று வெட்டி கொலை செய்துள்ளது. பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் பள்ளிக்கரணை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் சங்கர். இவர் ரியல் எஸ்டேட் அதிபராக உள்ளார். பள்ளிக்கரணையில் சொந்தமாக திருமண மண்டபம் ஒன்று கட்டி அதனை வாடகைக்கு விட்டு வருகிறார். நிலங்களை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்ட இவருக்கு வியாபார போட்டிகளும் எதிரிகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று வழக்கம் போல தனது திருமண மண்டபத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மண்டபத்திற்குள் நுழைந்த மர்ம கும்பல் சங்கரை சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர் அங்கேயே சரிந்தார்.
வந்த வேலையை முடித்துவிட்ட மர்ம நபர்கள் அங்கிருந்த காரில் தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த சங்கரை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
தகவல் அறிந்த பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக சங்கர் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தப்பியோடிய 4 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications