மக்களாட்சியின் நான்கு தூண்களின் ஆரோக்கியத்தை மீட்டெடுப்போம்- கருணாநிதி
சென்னை: மக்களாட்சியின் நான்கு தூண்களினுடைய நல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும், ஜனநாயக - சோஷலிச - சமயச் சார்பற்ற சக்திகள் ஒன்றுபட்டு, ஆழ வேரூன்றிச் செல்வாக்கு பெறவும், நமது நாட்டின் இளைஞர்கள் எத்தகைய தியாகத்தையும் செய்ய, உறுதி மேற்கொள்ள வேண்டுமென திமுக தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று 93வது பிறந்தநாள் கொண்டாடும் கருணாநிதி, தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்துச்செய்தி:
சட்டமன்றத் துறை, நீதித் துறை, நிர்வாகத் துறை, பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகத் துறை ஆகிய நான்கு தூண்களே மக்களாட்சி எனும் மணி மண்டபத்தைத் தாங்கிக் கொண்டிருக்கின்றன. அந்தத் தூண்கள், எத்தகைய தூய்மையான நோக்கங்களைத் தாங்கிப் பிடிப்பதற்காக உருவாக்கப்பட்டனவோ, அந்த நோக்கங்கள் இந்த நூற்றாண்டில் மிகப் பெரும் சோதனைக்குள்ளாகி, சவால்களை எதிர் நோக்கி உள்ளன.

சோதனைகளில் வென்று, புடம் போட்ட பொன்னாக மிளிர வேண்டிய அந்தத் தூண்கள், துருப்பிடிக்கத் தொடங்கிவிட்டன. அவற்றின் பெறுமானமும் (Value) சரியத் தொடங்கி விட்டது. அதற்குக் காரணம், மக்களாட்சிக்கு விரோதமான சக்திகள், நமது சமுதாய - அரசியல் கட்டமைப்பின் அனைத்துப் பகுதிகளிலும் ஊடுருவி, உருக் குலைத்து வருகின்றன என்பது தான்.
இந்த எதிர்மறைப் பாதிப்பை எப்பாடுபட்டேனும் தடுத்து நிறுத்தி, மக்களாட்சியின் நான்கு தூண்களினுடைய நல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும், ஜனநாயக - சோஷலிச - சமயச் சார்பற்ற சக்திகள் ஒன்றுபட்டு, ஆழ வேரூன்றிச் செல்வாக்கு பெறவும், நமது நாட்டின் இளைஞர்கள் எத்தகைய தியாகத்தையும் செய்ய, உறுதி மேற்கொள்ள வேண்டுமென விரும்புகிறேன்
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications