பாடலாசிரியர் அண்ணாமலை கொல்லப்பட்டாரா?.. உறவினர்கள் பரபரப்பு சந்தேகம்!
சென்னை: பாடலாசிரியர் அண்ணாமலையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேட்டைக்காரன், வேலாயுதம் உட்பட 50 படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதியவர் கவிஞர் அண்ணாமலை.விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த கீழப்பட்டுவைச் சேர்ந்த இவர், மகளின் படிப்பிற்காக சென்னை சேத்துப்பட்டு, ஹாரிங்டன் சாலையில் உள்ள ஒரு வீட்டில் குடியிருந்தார்.

நேற்று முன் தினம் மாலை வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த அண்ணாமலையை அவரது மனைவி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அண்ணாமலை இறந்து பல மணிநேரம் ஆகிவிட்டதாகத் தெரிவித்தனர்.
மாரடைப்பால் அண்ணாமலை உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அண்ணாமலையில் தலையில் காயம் இருப்பதாகவும், எனவே அவரது மரணம் இயற்கையானது இல்லை என்றும் அவரது உறவினர்கள் சந்தேகம் கிளப்பியுள்ளனர்.
நேற்று முன் தினம் காலை 8.40 மணியளவில் தன் நண்பர் ஒருவரிடம் கடைசியாகப் பேசியுள்ளார் அண்ணாமலை. ஆனால் அதன் பிறகு அவர் யாருடைய போனையும் எடுக்கவில்லை. எனவே, அப்போதே அவர் சுயநினைவை இழந்திருக்க வேண்டும் அல்லது உயிரிழந்திருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.
கடந்த பல ஆண்டுகளாகவே, குடும்பத்தில் அண்ணாமலைக்கு சில பிரச்னைகள் இருந்து வந்துள்ளது. எனவே, அவர் கொலைகூட செய்யப்பட்டிருக்கலாம் என்பதே அவரது உறவினர்களின் சந்தேகம்.
இதனால், அந்தக் கோணத்திலும் போலீசார் விசாரித்து உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக உள்ளது.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா?












Click it and Unblock the Notifications