நிவாரண பொருட்கள் வழங்க விரும்புவோர் அறிவாலயத்தில் ஒப்படைக்கலாம்: கருணாநிதி
சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்ளை வழங்க விரும்புவோர் அவற்றை அண்ணா அறிவாலயத்தில் கொண்டு வந்து ஒப்படைக்குமாறு திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கழக உடன்பிறப்புகள் தங்களால் இயன்ற அளவுக்கு உதவிகளை வழங்கிட முன்வர வேண்டுமென்று 1-12-2015 அன்று நான் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, கழகத் தோழர்கள் பலரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பல்வேறு அடிப்படைத் தேவையான பொருள்களை வழங்கிட முன் வந்து, அவற்றை வழங்கி வருகிறார்கள்.

மேலும் சிலர், அத்தகைய பொருள்களை எங்கே கொண்டு போய், யார் மூலமாக வழங்குவது என்று தெரியாத நிலையில் இருப்பதாக தலைமைக் கழகத்திற்கும், தனிப்பட்ட முறையிலும் தொலைபேசி வாயிலாக விசாரித்து வருவதையொட்டி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக அத்தியாவசியப் பொருள்களை உதவிட முன் வரும் கழகத் தோழர்கள், கழகத் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கொண்டு வந்து ஒப்படைத்தால், அதனைப் பெற்று விநியோகம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications