போயஸ் இல்லத்திற்குள் நடந்தது என்ன? குண்டர்களால் மண்டை உடைக்கப்பட்ட நிருபர் கதறல் பேட்டி!
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டிற்குள் தனியார் நிறுவன குண்டர்கள் கட்டையை வைத்து தாக்கியதாக ஆங்கில ஊடக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சென்னை: மறைந்த ஜெயலலிதாவின் வீட்டிற்குள் ஜெ. தீபாவுடன் நடந்த வாக்குவாதத்தை படம்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த குண்டர்கள் செய்தி ஊடக ஒளிப்பதிவாளரையும், செய்தியாளரையும் கடுமையாக தாக்கியதாக பாதிக்கப்பட்ட செய்தியாளர் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று காலை போயஸ் கார்டனுக்குள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒருபக்கம் பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் தீபாவுடன் ஆங்கில செய்தி ஊடகமான ரிபப்ளிக் செய்தி சேனலின் செய்தியாளர் சஞ்சீவும், ஒளிப்பதிவாளரும் சென்றுள்ளனர்.

குண்டர்கள் தாக்குதல்
வேதா இல்லத்திற்குள் சென்ற தீபாவை அங்கிருந்த தனியார் நிறுவன பாதுபாப்பு குண்டர்கள் தீபாவுடன் வாக்குவாதம் செய்ததை அவர்கள் படம்பிடித்துள்ளனர். முதலில் இதை படம்பிடித்ததை வேடிக்கை பார்த்த குண்டர்கள் பின்னர் சஞ்சீவையும், ஒளிப்பதிவாளரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

வேடிக்கை பார்த்த காவல்துறை
உருட்டுக்கட்டையால் அடித்ததோடு, மண்டையில் ரத்தக்காயம் வரும் அளவிற்கு கொலைவெறியுடன் நடந்துள்ளனர். ஆனால் இந்த சம்பவங்கள் நடந்த போதும் காவல்துறையினர் வேடிக்கை மட்டுமே பார்த்துள்ளனர்.

தரதரவென இழுத்தனர்
சிறிது நேரத்தில் கேமரா,நேரலை செய்யும் கருவி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்ததோடு போயஸ் கார்டன் வெளிவட்ட சாலை வரை இழுத்துவிட்டு சென்றுள்ளனர்.
வீடியோவை பாருங்கள்
தாக்கப்பட்ட செய்தியாளர் இந்தச் சம்பவத்தைவிவரிக்கும் காட்சிகள் ஒன் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. மேலும் அங்கு குண்டர்கள் நடந்து கொண்ட விதம் குறித்தும் சஞ்சீவ் பல அதிரடித் தகவல்களைத்தெரிவித்துள்ளார். முழு விவரங்களை தெரிந்து கொள்ள வீடியோவை பாருங்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications