தேர்தல் அரசியலுக்கு குட்பை சொன்ன எச்.ராஜா.. அதுவும் பாஜக நிறுவன தினத்தில் அறிவிப்பு
சிவகங்கை: உலகிலேயே 23 ஆண்டுகள் தொடர்ந்து அரசு நிர்வாகத்தில் இருந்து ஆட்சி செய்யும் ஒரே அரசியல் தலைவர் மோடிதான். தேர்தல் அரசியலில் இருந்து நான் விலகுகிறேன். சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதாதான் போட்டியிடும். ஆகவே தற்போதே தேர்தல் பணியை அங்கு தொடங்க வேண்டும் என்று ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் எச். ராஜா. பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருக்கும் எச். ராஜா, பரபரப்பாகவும்.. ஆவேசமாகவும் பேசுவதில் பெயர் போனவர். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு எச். ராஜா தோல்வி அடைந்தார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் எச். ராஜா போட்டியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக எச். ராஜா அறிவித்தது பாஜகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கையில் பாஜக நிறுவனத் தினத்தையொட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற எச். ராஜா பின்னர் பேசுகையில் கூறியதாவது:- கிளைக் கூட்டங்களை வாரம் தோறும் நடத்தி மக்கள் பிரச்சினைகளை தெரிந்துகொள்ள வேண்டும். அதேபோல், மத்திய அரசின் திட்டங்களை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சேர்க்க வேண்டும். உலகிலேயே 23 ஆண்டுகள் தொடர்ந்து அரசு நிர்வாகத்தில் இருந்து ஆட்சி செய்யும் ஒரே அரசியல் தலைவர் மோடிதான். தேர்தல் அரசியலில் இருந்து நான் விலகுகிறேன். சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதாதான் போட்டியிடும். ஆகவே தற்போதே தேர்தல் பணியை அங்கு தொடங்க வேண்டும்" என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எச்.ராஜா கூறியதாவது:- " சமூக நீதியை பாரதிய ஜனதாதான் காப்பாற்றி வருகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் சமூக நீதி மாநாட்டை நடத்தியுள்ளனர். இது கேலிக்கூத்தாக உள்ளது. எதிர்க்கட்சிகள் மக்கள் மறந்து விட்டனர். தாங்கள் இருப்பதை நியாகப்படுத்தவே இந்த மாநாட்டை நடத்தியுள்ளனர். தமிழக பட்ஜெட் மக்களை ஏமாற்றும் வகையில் உள்ளது. சிறுபான்மையினர், பட்டியலித்தனவர் பழங்குடியினர சேர்ந்தவரை குடியரசுத்தலைவராக்கியது பாரதிய ஜனதாதான். பிரதமர் மோடி அமைச்சரவரையில் பெண்கள், பட்டியலினத்தவர், பழங்குடியினர் அதிக அளவில் இடம் பெற்று இருக்கிறார்கள். தமிழகத்தில் சுறுசுறுப்பான கட்சியாக பாரதிய ஜனதா உள்ளது. தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் குறித்து அண்ணாமலை வெளியிடும் முன்பே தமிழகத்தில் பல மாற்றங்கள் ஏற்படும். அதன்பிறகு திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி எவ்வளவு காலம் என்பது தெரியவரும்" என்றார்.
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது?












Click it and Unblock the Notifications