சென்னையில் ஜல்லிக்கட்டு வேண்டும்.. ஆர்.ஜே.பாலாஜி திடீர் வேண்டுகோள்!
ஜல்லிக்கட்டு புரட்சியின் நினைவாக சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டை சென்னையிலும் ஒரு மாபெரும் தமிழர் திருவிழாவாய் ஆண்டுதோறும் நடத்த வேண்டும் என்று நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து ஆர்.ஜே.பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

"கடந்த ஒரு வாரமாக தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவே பார்க்காத அளவிற்கு ஒரு மாபெரும் புரட்சியை மக்களாகிய நாம் நிகழ்த்தியிருக்கிறோம். இந்தப் புரட்சி எந்த அளவிற்கு ஒரு முக்கியமான வரலாற்று பதிவென்றால் மக்களாகிய நாம் தெருவில் இறங்கி நம்முடைய உரிமைக்காக போராட்டி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறோம்.
நமது புரட்சியினால் நமது அரசாங்கம் ஜல்லிக்கட்டை ஒரு அவசர சட்டம் மூலம் நிரந்தரமாக நடத்துவதற்கு எல்லா வழிவகையையும் செய்வதாக உறுதி அளித்திருக்கிறது. கிட்டத்தட்ட 3 வருடமாக யாருமே முயற்சி எடுக்காத யாருமே நம்மை முன்னிறுத்திப் பேசாத ஒரு விஷயத்திற்காக நாம் தெருவில் இறங்கி போராடியதால் கிடைத்த விளைவும், அதோட வெற்றியும் தான் இது. ஆனால், நிரந்தர வெற்றி என்பது Amend PCA & Ban PETA தான். இதை அடைவதே நமது லட்சியம்.
இது ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டம் என்றாலும் கிட்டதட்ட ஒரு 20, 25 வருடமாக அனைத்து மக்கள் மனதிலும் இருந்த கோபம், ஆதங்கம் எல்லாவற்றுடைய வெளிப்பாடாக காவிரி பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை, பெப்சி கோக் தடை செய்ய வேண்டும் என்ற பல விஷயங்களை இந்தப் புரட்சி பேச வைத்தது.
நம்மைச் சுற்றி நிகழும் பல அரசியல் நிகழ்வுகளை இது கவனிக்க வைத்தது. அரசியல் என்பது தேர்தலில் நிற்பது மட்டுமல்ல. தெருவில் இருக்கும் ஒரு மரம் வெட்டப்பட்டுவதை நாம் தடுத்தால் அதுவும் ஒரு பெரிய அரசியல் என்று புரிய வைத்தது. இது தான் நிதர்சனமான உண்மை.
இந்தப் புரட்சி அறவழியில் நடந்ததாலேயே உலகம் இதை ஏற்றுக் கொண்டது. இந்தியா இந்தப் போராட்டத்தை புரிந்து கொண்டதோ, இல்லையோ நாம் தமிழன் என்கிற உணர்ச்சியோடு ஒன்றாக சேர்ந்திருக்கிறோம் என்று புரிந்து கொண்டது. இந்தப் புரட்சியில் கிடைத்த வெற்றியை ஒரு ஆரம்பம், தொடக்கம் என்று எடுத்துக் கொண்டு இதைக் கொண்டாடுவோம்.
இது மட்டுமல்ல, இதன்பின் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் கடைகோடித் தமிழனாக நான் உங்களின் பின் நிற்பேன் என்று உறுதியளிக்கிறேன். இந்த நேரத்தில் தமிழக அரசுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். இந்த மக்கள் புரட்சி வெற்றி பெற்றதன் அடையாளமாக ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்துவோம் என்று உறுதி அளித்திருக்கிறீர்கள்.
இந்த ஜல்லிக்கட்டை தமிழகத்தின் தலைநகரமான சென்னையிலும் தீவுத்திடலில் வருடா வருடம் அனைத்து தமிழர்களும் ஒன்றாக இணைந்து நடத்திய இந்த புரட்சியின் நினைவாக ஒரு மாபெரும் தமிழர் திருவிழாவாய் நடத்த வேண்டுமென்று ஒரு தாழ்மையான வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார்.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை












Click it and Unblock the Notifications