ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: நாளையுடன் பிரசாரம் ஓய்வு- "டேரா" போட்ட வெளியூர்வாசிகள் வெளியேற உத்தரவு!
சென்னை: சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் ஓய்கிறது. இதைத் தொடர்ந்து வெளி ஊர்களைச் சேர்ந்தவர்கள் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மாதம் 26-ந் தேதி வெளியானது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் கடந்த 3-ந் தேதி தொடங்கியது.

வேட்பாளர்கள்
இத் தேர்தலில் அண்ணா தி.மு.க. வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக மகேந்திரன் உட்பட 28 பேர் போட்டியிடுகின்றனர். பிரதான எதிர்க்கட்சிகளான தி.மு.க, காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க, தே.மு.தி.க., விடுதலைச் சிறுத்தைகள், த.மா.கா, புதிய தமிழகம், பாரதிய ஜனதா கட்சி ஆகியவை தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்துள்ளன.

சில மணிநேரம் பிரசாரம்
இடைத் தேர்தலுக்கான பிரசாரம் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல்வர் ஜெயலலிதா நேற்று முன் தினம் ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரே ஒரு நாள் மட்டும் சில மணிநேரம் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

நாளையுடன் ஓய்வு
ஜெயலலிதாவுக்காக தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலரும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தல் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் ஓய்கிறது.

வெளியேற்றம்
இதைத் தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் எனவும், திருமண மண்டபங்கள், விடுதிகளில் யாரும் தங்கியிருக்கக் கூடாது என்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

27-ந் தேதி வாக்குப் பதிவு
ஆர்.கே.நகர் தொகுதிக்கு உள்பட்ட இடங்கள் அனைத்தும் நாளை மாலை முதல் தீவிர சோதனைக்கு உள்படுத்தப்படும். வாக்குப் பதிவு வருகிற 27-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. ஜூன் 30-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் உடனே அறிவிக்கப்படும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications