இரட்டை இலையுடன் களத்துக்கு வரும் மதுசூதனன்.. ஆழ குழிபறிக்க காத்திருக்கும் அமைச்சர் கோஷ்டி
ஆர்கே நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மதுசூதனன் போட்டியிட்டால் அவரை வீழ்த்த அமைச்சர் ஒருவர் ரெடியாக இருக்கிறாராம்.
Recommended Video

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் இரட்டை இலையை மீட்டுக் கொடுத்த மதுசூதனனே மீண்டும் அதிமுகவின் வேட்பாளராக போட்டியிடக் கூடும் என தெரிகிறது. ஆனால் மதுசூதனன் வெற்றி பெற்றால் இருப்புக்கே உலை என நினைக்கும் அமைச்சர் ஒருவர் குழிபறித்து குப்புற தள்ள 'வலை' விரித்து காத்திருக்கிறாராம்.
ஆர்கே நகர் தொகுதி தேர்தலில் கடந்த ஏப்ரலில் ஓபிஎஸ் அணியின் சார்பில் மதுசூதனன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து சசிகலா அணியின் தினகரன் மோதினார்.

பணப்பட்டுவாடா
தினகரனுக்கு ஆதரவாக அப்போது அத்தனை அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் களமிறங்கினர். மேலும் தினகரன் சார்பாக வாக்காளர்களுக்கு தலா ரூ4,000 பட்டுவாடா செய்யப்பட்டது. இதனால்தான் தேர்தலே ரத்து செய்யப்பட்டது.

இரட்டை இலை மீட்பு
இப்போது டிசம்பர் 21-ல் மீண்டும் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேநேரத்தில் இரட்டை இலை சின்னம் மதுசூதனன் அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மதுசூதனை வீழ்த்த குழி
இரட்டை இலை சின்னத்துடன் களமிறங்குவதால் மதுசூதனன் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடி இருக்கிறது. ஆனால் மதுசூதனன் வெற்றி பெற்றால் எங்கே நாம் டம்மியாகிவிடுவோமோ என பதறும் அமைச்சர் எப்படியாவது குழிபறித்துவிடுவது என வலை விரித்து காத்திருக்கிறாராம்.

மோதலை ரசிக்கும் திமுக
இதை உணர்ந்திருக்கும் மதுசூதனனும் அமைச்சரை ஓரம்கட்டிவிட்டு எஞ்சியவர்களை வைத்து தீயாக வேலை செய்தாக வேண்டுமே என பதற்றத்துடன் இருக்கிறாராம்.
இந்த உள்ளடி வேலைகளை திமுக ரசிக்க தொடங்கியிருக்கிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications