தமிழ் புத்தாண்டு: ஆளுநர் ரோசையா, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
சென்னை: தமிழ் புத்தாண்டு, கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழக ஆளுநர், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் உலகெங்கிலும் உள்ள தமிழக மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்
ஆளுநர் ரோசைய்யா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், வருங்கால தலைமுறையை காக்கும் வகையில், இயற்கை வளத்தை காக்கவும், பருவ நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை களையவும் உறுதிமொழி எடுத்து கொள்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

உலக அளவில் இந்தியாவை முதன்மை நாடக்கவும், அமைதி, வளம், ஒற்றுமை தழைக்கவும் புத்தாண்டில் உறுதி எடுப்போம் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
பொன். ராதாகிருஷ்ணன்
புத்தாண்டு பிறக்கின்ற இந்த நல்ல நாளில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்று ஊழலற்ற தூய்மையான நிர்வாகத்தை தருகின்ற தாமரையின் ஆட்சியை தமிழகம் கண்டிட மோடியின் வளர்ச்சி வேகத்துக்கு தமிழகம் முன்னேற அனைத்து மக்களும் உறுதியேற்போம்.
இந்தியாவில் தமிழகம் முதல் நிலை மாநிலமாக மாறிட துன்முகி ஆண்டு வழி காட்டட்டும். புத்தாண்டில் தமிழ், தமிழன், தமிழகம் உலகில முதல் நிலை பெற்றிட உறுதி ஏற்று பணிபுரிவோம். வெற்றி பெறுவோம். அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
டாக்டர் ராமதாஸ்
சித்திரை என்பது வசந்தத்துடன் தொடர்புடைய விழா என்பதால் இந்த நாளில் தமிழக மக்களை சூழ்ந்திருக்கும் ஊழல்களும், தீமைகளும் அகன்று உண்மையும், நன்மையும் துணை சேரும் என்று நம்பலாம்.
நல்லது நடக்கும்
புதிய பயணத்தைத் தொடங்கியுள்ள தமிழ் மக்களாகிய நாம் நமது இலக்கை நெருங்கி விட்டோம். இன்னும் ஒரு மாதத்தில் இலக்கை எட்டி மாற்றத்தை ஏற்படுத்தி, அனைவருக்கும் முன்னேற்றத்தை பரிசாக வழங்குவதற்காக உழைக்க இந்நாளில் உறுதியேற்போம்.
எதிர்வரும் புத்தாண்டை மக்கள் நம்பிக்கையோடு பார்க்கிறார்கள், நல்லது நடக்கும் என எதிர் பார்க்கிறார்கள்.
விலைவாசி குறையவேண்டும்
இந்த ஆண்டு மழை பொழிய வேண்டும், வேளாண்மை செழிக்க வேண்டும், விலைவாசி குறைய வேண்டும், தொழில் வளம் பெருக வேண்டும், உயர்கல்வி எளியவருக்கும் இலகுவாகக் கிடைக்க வேண்டும், வேலை வாய்ப்பு உருவாக வேண்டும், எல்லாரும் எல்லாமும் பெற்று வாழ வேண்டும்.அத்தனையும் நிறைவேறும் வகையில் புதிய நம்பகமான அரசியல் சூழல் உருவாக வேண்டும்.
சமக தலைவர் சரத்குமார்
தமிழகத்தில் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தல் மீண்டும் தமிழகத்தில் நல்லாட்சி தொடர வைக்கும் விதமாக அமையட்டும். உலகின் மூத்த மொழியான தமிழ் பேசும் தமிழினம், தேசத்தை வல்லரசாக்கும் முதல் இனம் என்ற பெருமை இப்புத்தாண்டில் கிடைக்கச் செய்வோம்.
ஜி.கே.வாசன்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மலரும் புத்தாண்டில், எல்லாரும் எல்லாமும் பெற்று வாழ வேண்டும் என்ற நிலையை அடைய, அனைவரும் வாக்களிக்க முன்வர வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். தமிழக மக்கள் உயர்ந்த நிலையை அடைய கற்றறிந்த மேதைகள், சீர்திருத்தச் சிந்தனையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கை நண்பர்கள், ஊடகங்களின் பிரதிநிதிகள் வழிகாட்ட வேண்டும் எனவும் வாசன் கேட்டு கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications