ரவுடிகளை எல்லாம் குண்டர் சட்டத்தில் போடுங்க - புதுவை முதல்வர் நாரயணசாமி அதிரடி: வீடியோ
புதுவையில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயலில் ஈடுபடும் ரவுடிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என முதல்வர் நாரயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சமர் நாராயணசாமி குற்றச் செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யுங்கள் என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
புதுவையில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை,பலாத்காரம் உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. எனவே குற்றச் செயல்களில் ஈடுபடும் ரவுடிகளைக் கட்டுப்படுத்த அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் புதுவை பாஜக தலைவர் சுவாமிநாதன்கூறியிருந்தார்.

மேலும், தேவைப்பட்டால் என்கவுண்டர் செய்ய வேண்டும் என சுவாமிநாதன் கோரிக்கை விடுத்திருந்தார்.புதுவையில் குண்டர் சட்டம் அமலுக்கு வரவில்லை எனில் பாஜக போராட்டம் நடத்தும் எனவும் அவர் எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில் புதுவை முதல்வர் நாராயணசாமி குற்றச் செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் குண்டர் சட்டம் அமலில் இருந்த போதும் குற்றங்களின் எண்ணிக்கை பெருமளவு குறையவில்லை என அத்துறையில் விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications