திமுகவின் கே.சி. பழனிச்சாமியின் ரூ2 கோடி உட்பட மொத்தம் ரூ95 கோடி பறிமுதல்: ராஜேஷ் லக்கானி
சென்னை: தமிழகத்தில் இதுவரை கணக்கில் வராத ரூ95 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் கேசி பழனிச்சாமியின் வீட்டில் இருந்து மட்டும் ரூ2 கோடி பறிமுதல் செய்ததாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகளுடன் இணைந்து பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். கட்சி பிரமுகர்கள், வேட்பாளர்கள் என பலரும் பதுக்கி வைத்திருந்த பணம், பொருட்கள் ஆகியவற்றை வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை செய்து பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதேபோல் அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளரான கே.சி. பழனிச்சாமி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் மற்றும் பொருட்களை பெருமளவு பதுக்கி வைத்துள்ளதாக தேர்தல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் பழனிச்சாமியின் வீடு, லாட்ஜ் மற்றும் உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தி ரூ50 லட்சம் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் உள்ள பழனிச்சாமி மகன் சிவராமன் வீட்டில் இருந்தும் கணக்கில் வராத ரூ1.50 கோடி ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த சில ஆண்டுகளாக சிவராமன் ரூ10 கோடி வரை வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆற்று மணல் கொள்ளை மூலம் பல்லாயிரம் கோடி சம்பாதித்தவர் கே.சி. பழனிச்சாமி. ஒவ்வொரு தேர்தலிலும் மணலில் இருந்து கிடைத்த பணத்தை 'வெள்ளமாய்' தொகுதியில் ஓடவிட்டு ஜெயித்து வருபவர் கே.சி. பழனிச்சாமி.
இம்முறையும் அதே பாணியில் களம் இறங்கிய பழனிச்சாமிக்கு கடிவாளம் போடும் வகையில் தேர்தல் ஆணையம் கிடுக்குப்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, கேசி பழனிச்சாமியின் வீட்டில் நடைபெற்ற சோதனைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. அவரது வீட்டில் இருந்து மட்டும் ரூ2 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கணக்கில் வராத ரூ95 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications