ரூ.1 கோடி வைர நெக்லஸ், ஜிமிக்கி, தங்க நகைகள் அபேஸ்.. அப்போலோ மருத்துவமனை டாக்டர் வீட்டில் துணிகரம்
அப்போலோ மருத்துவமனை டாக்டர் வீட்டில் ரூ.1 கோடி நகைகள் கொள்ளை போயுள்ளது.
Recommended Video

சென்னை: அப்போலோ மருத்துவமனையின் டாக்டர் வீட்டில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளை போயிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் கவுசிக். முடக்குவாத சிகிச்சை நிபுணரான இவர், தனியாக கிளினிக் நடத்தி வருவதுடன், அப்போலோ மருத்துவமனையிலும் பகுதி நேர மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இன்று காலை டாக்டர் கவுசிக், பணத் தேவைக்காக பீரோவை திறந்துள்ளார். அப்போது, அங்கு வைத்திருந்த 2 லட்சம் ரூபாயை இல்லாததை கண்டு திடுக்கிட்டார். மேலும் வைரம், தங்கத்தினாலான நகைகளும் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோவில் உள்ள மற்ற பொருட்களில் எவ்வித மாற்றமும் இல்லாததாலும், வழக்கமாக வைக்கப்பட்ட இடத்திலேயே பீரோ சாவி இருந்ததாலும் டாக்டருக்கு குழப்பமும் அதிகரித்தது.
மேலும் கொள்ளை போயுள்ளவை அனைத்தும் 1 கோடி ரூபாய் மதிப்புடைய தங்க, வைரத்தினாலான நெக்லஸ், செயின், ஜிமிக்கி, வளையல் என்பதால், உடனடியாக இதுகுறித்து நுங்கம்பாக்கம் காவல்நிலையத்துக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீசார், உடனடியாக விசாரணையை துவக்கியுள்ளனர். முதல்கட்டமாக வீட்டில் பணிபுரியும் பணியாளர்கள், கார் டிரைவர், என 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் வீட்டின் முன்இருந்த சிசிடிவி காமராவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு அணைத்து வைக்கப்பட்டுள்ளதால், வீட்டிற்குள் யார் வந்து போனார்கள் என்பதை கண்டறிய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். எனினும் கொள்ளையர்களை விரைவில் தனிப்படை அமைத்து பிடிப்போம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications