For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2 நாள் வருமான வரித்துறை சோதனையில் சிக்கியது ரூ152 கோடி ரொக்கம்!

வருமான வரித்துறையினர் கடந்த 2 நாட்களாக நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ152 கோடி ரொக்கம் சிக்கியுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை, பெங்களூரு, ஈரோட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் கணக்கில் வராத ரூ152 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 7 கிலோ தங்க கட்டிகள், 9 கிலோ தங்க நகைகளும் இச்சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்டன.

ஈரோடு தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான 10 இடங்களிலும் அரசு அதிகாரிகளின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் 2 நாட்களாக அதிரடி சோதனை நடத்தினர். சென்னை, கோவை, பெங்களூரு, ஈரோடு உள்ளிட்ட 10 இடங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.

Rs 152 Crore Unaccounted Income Detected From TN, Karnataka

இச்சோதனையின் போது கணக்கில் வராத ரூ152 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ரூ5.70 கோடியாக புதிய 2,000 ரூபாய் நோட்டுகளாகும். இந்த ரூபாய் நோட்டுகள் பெங்களூரு ஐஏஎஸ் அதிகாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் 7 கிலோ தங்க கட்டிகள், 9 கிலோ தங்க நகைகளும் இந்த சோதனையில் சிக்கின.

English summary
hIncome Tax department said that unaccounted income worth Rs 152 crore detected after it conducted searches in Karnataka and Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X