Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய எஸ்.ஏ சந்திரசேகர்.. விஜய் குறித்து முக்கிய "அப்டேட்"!

சினிமா இயக்குநரும், நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ராமேஸ்வரம் கோயிலில் இன்று தரிசனம் செய்தார்.

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: சினிமா இயக்குநரும், முன்னணி நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் இன்று காலை ராமேஸ்வரம் வந்தார். அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி ராமநாதசுவாமி கோயிலுக்குள் 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடி சிறப்பு தரிசனம் செய்தார்.

நடிகர் விஜய் இன்று முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அவருடைய தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்தான். தனது மகனை வளர்க்க அரும்பாடுபட்டார்.

சினிமாவை போல தனது மகனை அரசியலிலும் நுழைக்க வேண்டும் என்ற ஆசை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு உள்ளது. இதற்காக விஜய்யின் ரசிகர்கள் மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் அமைப்பாக மாற்ற எஸ்.ஏ. சந்திரசேகர் விஜய்யிடம் கேட்டு வந்தார். விஜய்யும் இப்போது ஆகட்டும், அப்போது ஆகட்டும் என சொல்லியதாக தெரிகிறது.

தேர்தல்

தேர்தல்

மேலும் எந்த தேர்தல் வந்தாலும் அந்த தேர்தலில் போட்டியிட ரசிகர் மன்றத்தை அரசியல் அமைப்பாக பதிவு செய்ய விஜய்யிடம் தொடர்ந்து தந்தை எஸ்.ஏ.சி வலியுறுத்தி வந்தார். ஒரு கட்டத்தில் தந்தையின் அரசியல் ஆசை எல்லை மீறி போவதை விஜய் உணர்ந்ததாக தெரிகிறது. எஸ் ஏ சியும் ஷோபாவும் தனது மகனின் அனுமதி இல்லாமலேயே அரசியல் அமைப்பாக பதிவு செய்ய முற்பட்டதாக தெரிகிறது.

விஜய் தரப்பும் கடும் எதிர்ப்பு

விஜய் தரப்பும் கடும் எதிர்ப்பு

இதற்கு விஜய் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து தனது தாய், தந்தை மீது வழக்கு தொடரும் அளவுக்கு போய்விட்டது. அது முதலே அப்பா- மகனுக்கு இடையே உறவில் விரிசல் ஏற்பட்டதாம். விஜய்யின் நீலாங்கரை வீட்டிற்கு விஜய்யின் குழந்தைகளை பார்க்க சென்றாலும் விஜய் தனது தாய் ஷோபாவிம் மட்டும் பேசுவதை வழக்காக கொண்டிருக்கிறாராம்.

81 ஆவது பிறந்தநாள் விழா

81 ஆவது பிறந்தநாள் விழா

அண்மையில் எஸ்.ஏ.சந்திரசேகரின் 81 ஆவது பிறந்த நாள் விழாவில் கூட விஜய் கலந்து கொள்ளவில்லை. எஸ்ஏசிக்கு ஷோபாவும் ஷோபாவுக்கு எஸ்ஏசியும் கேக் ஊட்டினர். இந்த படங்கள் சமூகவலைதளங்களில் வைரலானது. ஊருக்கு எல்லாம் உபதேசம் செய்யும் விஜய் தனது தாய், தந்தை விவகாரத்தில் சரியாக நடந்து கொள்ள வேண்டும் என்ற விமர்சனங்கள் எழுந்தன.

இசை வெளியீட்டு விழா

இசை வெளியீட்டு விழா

அது போல் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு படகுழுவினரின் அழைப்பின் பேரில் விஜய்யின் தாயும் தந்தையும் வந்து முன் வரிசையில் அமர்ந்திருந்தனர். அப்போது விஜய் மாஸ் என்ட்ரி கொடுத்தார். முதல் வரிசையில் அமர்ந்திருந்தவர்களிடம் கைகொடுத்த விஜய் தனது பெற்றோரிடமும் பத்தோடு 11 போல் கை கொடுத்ததும் ஷோபா தனது மகனையே ஏக்கமாக பார்த்ததும் வைரலானது.

ஆன்மீகம்

ஆன்மீகம்

இந்த நிலையில் ஆன்மீகத்தில் ஈடுபாடுடைய எஸ்.ஏ.சந்திரசேகர் இன்று காலை ராமேஸ்வரம் வந்தார். அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி ராமநாதசுவாமி கோயிலுக்குள் 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடி சிறப்பு தரிசனம் செய்தார். இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பிளாட்பாரத்தில் கிடந்த என்னை இந்த அளவிற்கு உயர்த்தியது இறைவன் தான். அவருக்கு நன்றி சொல்லவே இந்த சிவாலயத்திற்கு வந்தேன்.

சிவாலயம்

சிவாலயம்

எங்கெங்கெல்லாம் சிவாலயம் உள்ளதோ அங்கெல்லாம் சென்று தரிசனம் செய்வது எனக்கு மனநிறைவு, ஆத்ம திருப்தி கொடுக்கிறது. உழைத்தவர் எல்லாம் உயர்ந்ததில்லை. என்னை உயர்த்தியது அந்த சிவனே. எல்லாவற்றிற்கும் சிவன் தான். சிம்ம ராசியான எனக்கு உரித்தான கடவுள் சிவன். ஆகவே, சிவ வழிபாடு நடத்தினேன். எல்லா படங்களிலும் நடித்து வருகிறேன்.

வாழ வைக்கும் சினிமா

வாழ வைக்கும் சினிமா

சினிமா எங்களை வாழ வைக்கிறது. எனது மகன் வளர்ச்சி என்பது அவரது கடும் உழைப்பு, முயற்சி, தன்னம்பிக்கை இவைகளே அவருக்கு பல வெற்றி படங்களைத் தந்துள்ளது. அது மட்டுமின்றி எங்கள் பிரார்த்தனை, இறைவன் அனுக்கிரகம் ஆகியவற்றால் அவர் பல வெற்றி படங்களைக் கொடுத்து வருகிறார். இங்கு ஆன்மிகம் தவிர அரசியல் பேச வேண்டாம். எனது ஒவ்வொரு பிரார்த்தனையும் எனக்காக மட்டுமல்ல.

தாய்க்கும் ஆன்மீகத்தில் ஆர்வம்

தாய்க்கும் ஆன்மீகத்தில் ஆர்வம்

எனது மகன் குடும்பத்திற்காகவும், அவர் மீது அன்பு வைத்துள்ள கோடான கோடி தமிழ் ரசிகர்களுக்கும் நன்றி சொல்லவே. சினிமா தற்போது நல்ல திசை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது ஆரோக்கியமானது தான்" என்றார். விஜய்யின் தாய் ஷோபாவும் அவ்வப்போது கோயில்களுக்கு சென்று வழிபடுகிறார். அண்மையில் காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து வழிபாடு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+