தாய்ப்பால் குடித்தபோது பவர்கட்... "சேப்டி பின்"னை விழுங்கிய 10 மாதக் குழந்தை.. ஆபரேஷன் மூலம் அகற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாயிடம் பால் குடித்துக் கொண்டிருந்த போது சேப்டி பின்னை விழுங்கிய 10 மாதக் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை மூலம் அதனை நீக்கியுள்ளனர் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள்.

அரக்கோணத்தை அடுத்த மாடத்துக்குப்பம் பகுதியை சேர்ந்த பாண்டியன் - கோகிலா தம்பதியருக்கு திவ்யா என்ற 10 மாதக் குழந்தை உள்ளது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று இரவு தனது குழந்தைக்கு திவ்யா பால் கொடுத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது மின் தடை ஏற்பட்டுள்ளது.

Safety pin removed from 10-month-old’s food pipe

பால் குடித்துக் கொண்டிருந்த குழந்தை சிறிது நேரத்திலேயே வீறிட்டு அழத் தொடங்கியுள்ளது. அழுகையோடு மூச்சுத் திணறலும் சேர்ந்து கொள்ளவே பதறிப் போன கோகிலா, குழந்தையின் வாயில் சோதனை செய்துள்ளார். அப்போது தொண்டையில் ஏதோ பொருள் சிக்கியது தெரிந்துள்ளது.

பதறிப் போன கோகிலா, உடனடியாக குழந்தையைத் தூக்கிக் கொண்டு திருவள்ளூர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். அங்கு குழந்தையை எக்ஸ்ரே செய்து பார்த்த மருத்துவர்கள், குழந்தையின் உணவுக் குழலில் திறந்த நிலையில் சேப்டி பின் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

திருவள்ளூர் மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் உடனடியாக சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு திவ்யாவுடன் விரைந்துள்ளனர் அவளது பெற்றோர்.

அங்கு விரைந்து செயல்பட்ட மருத்துவர்கள் சிக்கலான அறுவைச் சிகிச்சை மூலம் சேப்டி பின்னை வெளியில் எடுத்தனர். இந்த அறுவை சிகிச்சையை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் பேராசிரியர் எஸ்.வி செந்தில்நாதன் தலைமையிலான 6 பேர் கொண்ட குழு செய்துள்ளது. மருத்துவர்கள் ஜெ.முத்துக்குமரன், கிருஷ்ணன், அனிருதன், குருபிரசாத், கௌரிசங்கர் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றவர்கள்.

இது தொடர்பாக மருத்துவர் முத்துக்குமரன் கூறுகையில், ‘ஒரு சாதனை புரிந்தோம் என்பதைவிட ஒரு குழந்தையின் உயிரை காத்துவிட்டோம் என்பதுதான் இப்போத எங்களுக்கு நிம்மதி அளிக்கிறது. கடந்த 24 ம் தேதி இரவு குழந்தை ஸ்ரீதிவ்யாவை அழைத்துவந்தனர் அவளது பெற்றோர். அழுதபடியே இருந்த குழந்தைக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் அவள் சேப்டி பின்னை விழுங்கியிருந்தது தெரிந்தது. திறந்தநிலையில் இருந்த அந்த சேப்டி பின், முந்தைய முயற்சிகளின்போது தொண்டையிலிருந்து நழுவி, வயிற்றின் இரைப்பையில் ஆபத்தான இடத்தில் சிக்கிக்கொண்டிருந்தது.

காது, மூக்கு, தொண்டை நிபுணர் மற்றும் குடல் இரைப்பை சிறப்பு மருத்துவர் உதவியை நாடினோம். ஆனால் அதில் சிக்கல் எழுந்தது. காரணம் குழந்தைகள் இப்படி விழுங்குவது சகஜமென்றாலும், ஸ்ரீதிவ்யா 10 மாதமே ஆன குழந்தை என்பதும், சேப்டி பின் திறந்த நிலையில் இருந்ததுமே.

இது எங்கள் மருத்துவ குழுவுக்கு பெரும் சவாலானதாகிவிட்டது. இப்படிப்பட்ட சமயங்களில் ஓஸ்கோபி (o'scopy) எனப்படும் வழக்கமான முறையில் டியூப்பை தொண்டை வழியே செலுத்தி விழுங்கிய பொருளை எடுப்போம். ஆனால் 10 மாத குழந்தையிடம் அதை முயற்சித்தால் திறந்த நிலையில் இருக்கும் சேப்டி பின், அருகிலுள்ள உறுப்புகளை கிழித்து இரத்தக் கசிவு ஏற்பட்டு குழந்தை உயிரிழக்கும் அபாயமுள்ளது.

அதே சமயம் 10 மாத குழந்தை என்பதால் எந்த அளவிற்கு டியூப்பை உள்ளே செலுத்த முடியும் என்பதில் சந்தேகம் இருந்தது. அதனால் அந்த முடிவை கைவிட்டு எங்கள் மருத்துவ குழு தீவிரமாக கலந்தாலோசித்தது.

அதன்பிறகுதான் சிஸ்டோஸ்கோப்பி என்ற புதிய முறையில் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தோம். இந்த முறையில் அறுவை ( cystoscopy) சிகிச்சை செய்வது இந்த மருத்துவமனைக்கு இதுதான் முதன்முறை. முடிவெடுத்தபின் கொஞ்சமும் தாமதிக்காமல் அறுவை சிகிச்சையை மேற்கொண்டோம். சிஸ்டோஸ்கோபி முறையில் வயிற்றின் குறுக்கே கிழித்து அதன் வழியே இரைப்பையில் 5 மிமீ அளவுக்கு சிறு ஓட்டை ஏற்படுத்தினோம். குழந்தை இரவு முதல் எதுவும் உண்ணாமல் இருந்ததால் இரைப்பை சுருங்கி பின் இறுக்கமான நிலையில் சிக்கியிருந்தது.

ஒருவகையில் உணவு எடுக்காமல் இருந்ததும் இம்மாதிரி சமயங்களில் சாதகமான ஒன்றுதான். அந்த ஓட்டை வழியே சிஸ்டோஸ்கோபி கருவியிலேயே பிரத்யேகமாக இணைக்கப்பட்ட மெல்லிய சிறு குழாய் வழியாக குழந்தையின் இரைப்பைக்குள் துளித்துளியாக சலைன் திரவம் செலுத்தினோம்.

இதனால் குழந்தையின் இரைப்பை சற்று விரி வடைந்து, சிஸ்டோஸ்கோபிக் கருவி பின்னை இயல்பாக கவ்விப்பிடிக்க வசதியாக இருந்தது. இருப்பினும் உச்சகட்டமாக வேறு எந்த உறுப்பு களுக்கும் பாதிப்பின்றி கருவியின் மூலம் பின்னை எடுக்கும் முயற்சி எங்களுக்கு சவாலாக இருந்தது.

கிட்டதட்ட 45 நிமிட போராட்டத்திற்கு பின் வெற்றிகரமாக சிஸ்டோஸ்கோபிக் கருவி, சேப்டி பின்னை லாவகமாக பிடித்துக்கொண்டது. அதை பாதுகாப்பாக வெளியே எடுத்தோம். அந்த 45 நிமி டங்களும் எங்கள் மருத்துவக்குழுவிற்கு பரபரப்பாக கழிந்தது. இப்போது குழந்தை நலமாக இருக்கிறாள். கொஞ்சம் ஓய்வுக்குப்பிறகு அவள் சகஜமாகிவிடுவாள்" என்றார்.

பேபி ஆஸ்பிடல் என்று அழைக்கப்படுகிற அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் நிகழ்த்தப் பட்ட இந்த அறுவை சிகிச்சை, தனியார் மருத்து வமனையில் செய்யப்பட்டிருந்தால் அதற்கு லட்சக்கணக்கில் செலவாகி இருக்கும் எனக் கூறப்படுகிறது.

சேப்டி பின் எடுக்கப் பட்ட பின்னர் திவ்யாவின் உடல்நிலை சீராக இருப்பதால், அவரது பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு அவர்கள் தங்களது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+