தீவிரவாதியை பிடிப்பது போல என்னை கைது செய்தனர்.. ஜாமீனில் வந்த மன்சூர் அலிகான் பேட்டி
தீவிரவாதியை கைது செய்தது போல் என்னை கைது செய்தனர், என்னை கைது செய்ய வந்த எல்லோருக்கும் நன்றி என்று ஜாமீனில் வெளியே வந்த மன்சூர் அலிகான் பேட்டியளித்துள்ளார்.
சென்னை: தீவிரவாதியை கைது செய்தது போல் என்னை கைது செய்தனர், என்னை கைது செய்ய வந்த எல்லோருக்கும் நன்றி என்று ஜாமீனில் வெளியே வந்த மன்சூர் அலிகான் பேட்டியளித்துள்ளார்.
சேலம் - சென்னை 8 வழி சாலை அமைக்கப்படுவது உறுதி என்று தமிழக முதல்வர் சட்டசபையில் சென்ற வாரம் அறிவித்துள்ளார். இந்த சாலை போடப்படும் என்று அறிவிப்பு வெளியானதில் இருந்தே மக்கள் இதற்கு எதிராக போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் சேலம் பசுமை வழிச்சாலை அமைக்க எதிராக கருத்து தெரிவித்து இருந்தார். இந்த சாலை முழுக்க முழுக்க மக்களுக்கு எதிரானது என்று குறிப்பிட்டார். இந்த நிலையில் சென்னை சூளைேமட்டில் மன்சூர் அலிகான் போலீசால் கைது செய்யப்பட்டார்.
மொத்தம் 12 நாட்கள் சிறையில் இருந்த அவர் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜாமினில் விடுதலையான மன்சூர் அலிகான் தற்போது பேட்டி அளித்துள்ளார்.
அதில் , தீவிரவாதியை கைது செய்தது போல் என்னை கைது செய்தனர். எந்த நோட்டிஸும் கொடுக்காமல் என்னை கைது செய்தார்கள், நோட்டிஸ் கொடுத்து இருந்தால் நானே விளக்கம் கொடுத்திருப்பேன்.
மூன்று பெரிய வாகனத்தில் வந்து என்னை கைது செய்தனர். அதை பார்க்கவே சிரிப்பாக இருந்தது. என்னை சிறைக்கு அனுப்பியவர்களுக்கு நன்றி. நான் சிறையில் இருந்த போது பலர் எனக்காக குரல் கொடுத்தனர். என் விடுதலைக்காக பேசினார்கள். அவர்களுக்கு நன்றி. எனக்காக சட்டசபையில் குரல்கொடுத்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி.
நல்ல திட்டத்திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும். அரசு நல்ல திட்டங்களை செய்தால் நானே இறங்கி உதவி செய்வேன். நானே கல்லும் மண்ணும் அள்ளிப்போட்டு காசு வாங்காமல் வேலை செய்ய தயார். ஆனால் அரசு அப்படி நல்ல விஷயம் எதுவும் செய்யவில்லை.
மக்களுக்கு பயன் தரும் நல்ல திட்டங்களை எடப்பாடி அரசு போட வேண்டும். இதனால் என்ன பயன் என்று சொல்லுங்கள். மக்கள் தெரிந்துகொள்ளட்டும். ஆனால் அரசால் சொல்ல முடியாது. இதனால் எப்படி ஏதும் பயன் இல்லை. ஏற்கனவே மூன்று வழி இருக்கிறது, இந்த வழி எதற்கு.
நான் பேசியது பெரிய விஷயம் இல்லை. ஆனால் கைது செய்தார்கள். இதைவிட மோசமாக வைரமுத்துக்கு எதிராக பேசி இருக்கிறார்கள். ஆனால் அவர்களை கைது செய்ய அரசுக்கு பயம். எல்லாம் மக்களுக்கு தெரியு. இது ஜனநாயக நாடுதானா என்று சந்தேகமாக இருக்கிறது.
மக்களுக்கு வாய்பூட்டு போட்டுள்ளனர். யாரையும் கைது பண்ண அரசு தயங்குவதில்லை. சும்மா வாய் திறந்தாலே கைது செய்கிறார்கள். எட்டு வழி சாலை போட்ட லட்டு லட்டா துட்டு கிடைக்கு என்று பாடிக்கொண்டே பேட்டி அளித்துள்ளார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications